தருண் விஜய்க்கு திருக்குறள் தூதர்’ விருது

 திருக்குறளுக்கும், தமிழுக்கும் நாடாளுமன்றத்திலும், வடமாநிலங்களிலும் குரல் கொடுத்து வரும் உத்தரகண்ட் மாநிலத்தை சேர்ந்த மாநிலங்களவை பாஜக உறுப்பினர் தருண் விஜய்க்கு, மலேசியாவில் உள்ள தமிழ் எழுத் தாளர்கள் அமைப்பு "திருக்குறள் தூதர்' விருதை ஞாயிற்றுக் கிமை வழங்கி கௌரவித்தது.

திருக்குறளுக்கும், தமிழுக்கும் அவர் ஆற்றிவரும் பணியைப் பாராட்டும்விதமாக அவருக்கு "திருக்குறள் தூதர் விருது' வழங்க மலேசியாவில் உள்ள "பெர்சாத்து வான் பெனுலிஸ் பெனுலிஸ் தமிழ் மலேசியா' எனும் தமிழ் எழுத்தாளர்கள் அமைப்பு முடிவுசெய்தது. அதன்படி, மலேசிய தலை நகர் கோலாலம்பூரில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தருண்விஜய்க்கு "திருக்குறள் தூதர்' விருதை மலேசிய இந்திய காங்கிரஸ் (ம.இ.கா) தலைவர் டத்தோ எஸ். சாமி வேலு வழங்கினார்.

அவர் பேசுகையில், "தமிழையும், திருவள்ளுவரையும், திருக்குறளையும் பல பகுதிகளுக்கு கொண்டு செல்வதில் தருண் விஜய் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கான ஒரு மாவீரராக உருவாகியுள்ளார். தமிழுக்கான உங்களது அனைத்து வித பங்களிப்புகளை நாங்கள் மதிக்கிறோம். பிரதமர் நரேந்திரமோடி தலைமையின் கீழ் இந்தியா வேகமான வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அவருடைய வருகைக்காக மலேசியா காத்திருக்கிறது. அவரது வருகை வரலாற்று சிறப்பு மிக்கதாக அமையும்' என்றார்.

தருண் விஜய் எம்.பி. கூறியதாவது: "புலம் பெயர்ந்துவாழும் தமிழர்களின் நேசமும், வாஞ்சையும் வாழ்க்கையை மாற்றக் கூடிய அனுபவத்தை எனக்கு அளித்துள்ளது. தமிழின் மேம்பாட்டுக்கு என்னாலான அனைத்து பணிளையும் செய்வேன். இந்தியாவின் வடக்கு மற்றும் தெற்கின் ஒற்றுமைக்கான மாபெரும் இலக்கிய சின்னங்களை மேம்படுத்த தொடர்ந்துபாடுபடுவேன்.

இந்திய தத்துவ வியலின் மிகப் பெரிய சின்னமாகத் திகழும் திருவள்ளுவர் பற்றி இதுவரை வடஇந்தியாவில் அறிமுகப் படுத்தாமல் இருந்தது துரதிருஷ்ட வசமாகும். வடஇந்தியா முழுவதும் திருவள்ளுவர் பிறந்த தினத்தை கொண்டுவதற்கான சாத்தியத்தை ஏற்படுத்தியபெருமை பாரத பிரதமர் நரேந்திர மோடி, மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகிய இருவரையுமே சாரும். பிரதமர் நரேந்திரமோடி எப்போதும் திருவள்ளுவருக்கும், பாரதிக்கும் மிகப்பெரிய மரியாதை அளித்துவருபவர்' என்றார் தருண் விஜய்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...