இந்தியா -மலேசியா இருதரப்பு ஒத்துழைப்பை வேளாண்மை துறையில் அதிகரிக்க முடிவு

இந்தியா, மலேசியா ஆகிய இருநாடுகளும், வேளாண்மை துறையில் குறிப்பாக, எண்ணெய் பனை உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளன.  மத்திய வேளாண், உழவர் நலன், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான், மலேசியா நாட்டின் தோட்டப்பயிர்கள் துறை அமைச்சர்  டத்தோ ஸ்ரீ ஜொஹாரி அப்துல் கனியை சந்தித்த போது, இது குறித்து விவாதிக்கப்பட்டது.

2024 ஜூலை 16 முதல் 19 வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மலேசிய அமைச்சர், புதுதில்லியில் உள்ள க்ரிஷி பவனில் மத்திய வேளாண்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகானை இன்று (18.07.2024) சந்தித்து பேசினார். அப்போது இந்தியா மற்றும் மலேசியா இடையேயான வேளாண்துறை ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

சமையல் எண்ணெய் – எண்ணெய் பனை உற்பத்திக்கான தேசிய இயக்கத்தில் ஒத்துழைப்பை மேற்கொள்ள, இருதரப்பும் விருப்பம் தெரிவித்ததுடன், வேளாண் மற்றும் அதனைச் சார்ந்த பொருட்களுக்கான சந்தை அணுகுதலில் உள்ள பிரச்சனைகள் குறித்தும், வேளாண் துறை ஒத்துழைப்பை, அமைப்பு ரீதியாக்குவது குறித்தும், தோட்டக்கலைத் துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மலேசிய அமைச்சர் இந்தியாவில் மேற்கொண்ட பயணம் வெற்றிகரமாக அமைந்ததற்கு நன்றி தெரிவித்த மத்திய வேளாண் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான், வேளாண்மை மற்றும் பிற துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை தொடர விருப்பம் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

அமுக்கிரா கிழங்கு

இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் ...

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...

புற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்

அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ...