விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தில் இந்த்யாவிற்கு முதல் வெற்றி

 நிலவுக்கு மனிதனை அனுப்ப வேண்டும் என்பது இந்தியாவின் நீண்ட நாள் கனவு. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் தனது ஆராய்ச்சியில் முதல்கட்டமாக ஆளில்லா விண்கலம் ஒன்றைத் தயாரித்து சென்ற வாரம் வியாழக்கிழமை விண்வெளிக்கு அனுப்பியதில் வெற்றியும் பெற்றுள்ளது இஸ்ரோ. இதன் மூலம் இந்தியா விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் முதலடி எடுத்து வைத்துள்ளது.

இந்தப் பரிசோதனையைச் செய்து பார்க்க ஆளில்லாத விண்கலம் ஒன்று வடிவமைக்கப்பட்டது. கப் கேக் வடிவதில் ஒரு சிறிய படுக்கை அறையைப் போன்று வடிவமைக்கப்பட்ட அதில் மூன்று பேர் பயணிக்கலாம். இதற்கு CARE (Crew Module Atmospheric Re-entry Experiment) என்று பெயர் சூட்டப்பட்டது. 3.1 டன்.

இதில் உள்ள சவால் என்னவென்றால் ராக்கெட் ஒன்றின் மூலம் 126 கிலோ மீட்டர் உயரத்திற்கு எடுத்துச் செல்லப்படும் ஏவப்பட்ட ஐந்தாவது நிமிடத்தில் இந்த விண்கலம் அந்த உயரத்தில் ராக்கெட்டிலிருந்து பிரிந்து பூமிக்குத் திரும்ப வேண்டும்; அப்படித் திரும்பும்போது பயங்கர வேகத்தில் பூமியை நோக்கி வரும். அந்த வேகத்தைக் கட்டுப்படுத்தி, படிப்படியாகக் குறைத்து கடலில் விழும்படி செய்ய வேண்டும்; இப்படித் திரும்பி அது வளிமண்டலத்தில் நுழையும்போது பயங்கர வெப்பம் (1,600 டிகிரி செல்சியஸ்) உருவாகும். அதைத் தாக்குப் பிடிக்கும் வண்ணம் வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் தகடுகள் அமைக்கப்பட வேண்டும். 15 கி.மீ. உயரத்திற்கு வரும்போது இந்த விண்கலத்தில் மேல்மூடி பிரிந்து பாராசூட்டுகள் வெளிப்பட வேண்டும். இத்தனையும் 15 நிமிடத்திற்குள் செய்யப்பட்டாக வேண்டும்.

இந்த சவால்களைத் துல்லியமாக நிறைவேற்றி வெற்றி கண்டுள்ளது இஸ்ரோ.

இந்த வெற்றியின் கொண்டாட்டத்திற்குப் பின்னுள்ள அம்சம் என்னவென்றால் இதற்காக நாம் 12 ஆண்டுகள் காத்திருந்தோம். இதற்கு முன்னதாக நாம் அனுப்பிய மார்க்-2 படுதோல்வி. காரணம், ரஷ்யா நமக்கு அளித்திருந்த கிரையோஜெனிக் எஞ்சின்கள் காலை வாரிவிட்டன. ஆனால் இந்த முறை பயன்படுத்தப்பட்டிருப்பது நாமே உருவாக்கிய எஞ்சின்கள். அவை இதோ, இங்கே திருநெல்வேலிக்கு அருகில் உள்ள மகேந்திரகிரியில் தயாரானவை.

ஆளில்லாத விண்கலத்தை எடுத்துச் சென்ற ஜி.எஸ்.எல் மார்க்-3 ராக்கெட் மிகப் பெரிய ராக்கெட் (630 டன், 43.4 மீட்டர் உயரம்).
இந்த ஆய்வின் மூலம் அறியப்படும் தகவல்களைக் கொண்டு மனிதர்களை அனுப்பும் விண்கலன்களைத் தயாரிக்க முடியும். இதன் மூலம் 2020-ஆம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் நிகழ்வு நடைபெறும் என்று இஷ்ரோ நம்பிக்கை தெரிவித்துள்ளது.

'நாசா' விண்கலத்தில் இந்தியர்களின் பெயர்: ஜி.எஸ்.எல்.வி.மார்க்-3 ராக்கெட் போல அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவும் ஆரியன் என்ற விண்கல மாதிரியை விண்வெளிக்கு அனுப்பியது. இந்த விண்கலத்தில் ஒரு நாணய அளவிலான சிப் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த 'சிப்'பில் மனிதர்களின் பெயர்களைப் பதிவு செய்ய உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் 'நாசா' வேண்டுகோள் விடுத்திருந்தது. அதன்படி 1 லட்சத்து 78 ஆயிரத்து 144 இந்திய விண்வெளி ஆர்வலர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொண்டனர். இப்படி 230 நாடுகளைச் சேர்ந்த 13 லட்சத்து 79 ஆயிரத்து 961 பேரின் பெயர்கள் அந்தச் சிப்பில் பதிவு செய்யப்பட்டு ஆரியன் விண்கலத்துடன் இணைத்து விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. இதன் மூலம் 1 லட்சத்து 78 ஆயிரத்து 144 இந்தியர்களின் பெயர்கள் விண்வெளிக்குச் சென்று விட்டு திரும்பியுள்ளன.

நன்றி : புதிய தலைமுறை
என்.ஹரிபிரசாத்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில� ...

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் மிரட்டலுக்கும் அடிபணிபவர் இல்லை “பிரதமர் மோடி எந்தவொரு நாட்டுக்கும், எந்தவொரு மிரட்டலுக்கும் அடிபணிபவர் ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர� ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள் பாகிஸ்தானுக்கே சென்று விடலாம் ஆபரேஷன் சிந்தூரை பாரட்டி தமிழ்நாடு பாஜக சார்பில் தேசியக்கொடி ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் � ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் வரையறைகள் உள்ளன அ.தி.மு.க.,வுடனான கூட்டணியை இறுதி செய்வதற்காக அமித் ஷா தமிழகம் ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தே ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தேவையில்லை – அண்ணாமலை ''தமிழக முதல்வரை சாமானியராக இருந்து குறை சொல்லலாம். அதற்கு ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அம� ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு ...

மருத்துவ செய்திகள்

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...