விண்வெளியில் இரண்டு செயற்கைகோள்களை இணைக்கும் ‘டாக்கிங்’ செயல்முறை வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இதன்மூலம், செயற்கைக்கோள்களை விண்வெளியில் இணைத்த 4வது நாடு என்ற சாதனையை இந்தியா படைத்தது.
சர்வதேச விண்வெளி மையத்தைப் போல, வரும் 2035ம் ஆண்டுக்குள் தனி விண்வெளி மையத்தை அமைக்க இந்தியா முயற்சித்து வருகிறது. மேலும், ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் திட்ட பணிகளும் இறுதிக்கட்டத்தில் உள்ளன.
இத்தகைய பணிகளுக்கு, விண்வெளியில் இரு விண்கலன்களை இணையச் செய்யும் டாக்கிங் தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். இதற்கான முன்னோட்டமாக, பி.எஸ்.எல்.வி., சி 60 ராக்கெட் மூலம் அனுப்பிய இரு செயற்கை கோள்களை விண்வெளியில் இணைக்கும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டிருந்தது.
தலா 220 கிலோ எடை கொண்ட சேஸர், டார்கெட் ஆகிய இந்த ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் முதலில் ஜனவரி 7ம் தேதி இணையச் செய்வதற்கு திட்டமிடப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் ஒருங்கிணைக்கும் திட்டம் தள்ளிப்போனது. தொடர்ந்து, அனைத்து சென்சார்களும் மதிப்பீடு செய்யப்பட்டு, படிப்படியாக, ஸ்பேடெக்ஸ் விண்கலன்களை இணைப்பதற்கான தூரம் குறைக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இன்று (ஜன.,16) விண்வெளியில் இரண்டு செயற்கைகோள்களை இணைக்கும் ‘டாக்கிங்’ செயல்முறை வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
இது குறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், ‘விண்கலன்களை இணையச் செய்யும் வரலாற்று நிகழ்வு வெற்றி பெற்றுள்ளது. விண்வெளியில் டாக்கிங் செய்த 4வது நாடு இந்தியா,’ எனக் குறிப்பிட்டுள்ளது.
ரஷ்யா, அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து, செயற்கைக்கோள்களை விண்வெளியில் இணையச் செய்த 4வது நாடு என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது.
சரித்திர சாதனை படைத்த இந்திய விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ புதிய தலைவர் நாராயணன் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ... |
30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ... |
உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ... |