எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் மூலம் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒன் வெப் நிறுவனத்தின் 36 செயற்கைக்கோள்கள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள இரண்டாவது ஏவு தளத்தில் இருந்து , இன்று காலை 9 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து விஞ்ஞானிகள் மத்தியில் இஸ்ரோ தலைவர் திரு சோம்நாத் பேசுகையில்,
இந்த ராக்கெட் வெற்றிக்கு உழைத்த என்எஸ்ஐஎல், இஸ்ரோ மற்றும் ஒன் வெப் நிறுவனங்களுக்கு வாழ்த்துகள். செயற்கைக்கோள்கள் சரியான புவி சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து பிஎஸ்எல்வி ராக்கெட் வரும் ஏப்ரல் மாதத்தில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. அடுத்தடுத்து ஜிஎஸ்எல்வி வகை ராக்கெட்கள் ஏவப்பட உள்ளன. இவ்வாறு இஸ்ரோ பல முக்கிய பணிகளில் ஈடுபட்டுள்ளது என்றும் இது போன்ற வர்த்தக ரீதியான ஏவுதலுக்கு இஸ்ரோவுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வரும் பிரதமருக்கும், மத்திய அரசுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். இதில் பயன்படுத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி ராக்கெட், இந்தியாவின் கனவு திட்டமான மனிதர்களை விண்ணிற்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திலும் பயன்படுத்தப்பட உள்ளது என்று தெரிவித்தார்.
*
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |
பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ... |
குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ... |