மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத் தலைவர் லீலா சாம்சன் உட்பட 13 பேர் ராஜினாமா செய்துள்ள விவகாரம் காங்கிரஸாரால் அரசியலாக்கப்படுகிறது என்று மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி சாடியுள்ளார்.
தேரா சச்சா சவுதா தலைவர் ராம் ரஹீம் சிங் படமான மெசஞ்சர் ஆஃப் காட் திரைப்படத்தை திரையிட அனுமதி அளிக்கப்பட்ட விவகாரமே இப்போது பெரிய சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.
இந்நிலையில் அருண் ஜேட்லி தனது முகநூலில் இது பற்றிய எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:
கடந்த 2004ஆம் ஆண்டு, மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைமையிலான அரசு முதன்முதலில் பதவியேற்றபோது, திரைப்பட நடிகர் அனுபம் கெர் தலைமையில் இருந்த தணிக்கைக் குழுவை, முந்தைய அரசால் நியமிக்கப்பட்ட குழு என்ற ஒரே காரணத்துக்காக கலைத்தது. திரைப்படத் தணிக்கைக் குழுவை, அந்த அரசு அரசியலாக்கியது. ஆனால், அதுபோல் நாங்கள் செய்யவில்லை. இந்த விவகாரத்தை, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் நியமிக்கப்பட்டவர்கள் வீண் அரசியலாக்குவது வருத்தத்துக்குரியது.
திரைப்படத் தணிக்கைக் குழு விவகாரத்தில் நாங்கள் (அவரும், மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் ரத்தோர்) ஒருபோதும் தலையிட்டது கிடையாது. தற்போதிருக்கும் திரைப்படத் தணிக்கைக் குழுவானது, முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் நியமிக்கப்பட்டதாகும். எனவே, ஊழல் எதுவும் நடைபெற்றிருந்தாலும் கூட, அவர்களே அதற்குக் காரணமாவர். அந்த ஊழல் குறித்து, எனது கவனத்துக்கு திரைப்படத் தணிக்கைக் குழுத் தலைவர் கொண்டு வரவில்லை.
திரைப்படத் தணிக்கைக் குழுக் கூட்டத்தைக் கூட்டவில்லை என தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டும், அவர்கள் மீது அவர்களே தெரிவிக்கும் குற்றச்சாட்டுதான். அந்த அமைப்பின் கூட்டத்தை மத்திய அமைச்சரோ அல்லது அமைச்சகச் செயலரோ கூட்டுவது கிடையாது. திரைப்படத் தணிக்கைக் குழுத் தலைவர்தான் கூட்ட வேண்டும்.
திரைப்படத் தணிக்கைக் குழுவுக்கு அரசு நிதி ஒதுக்கவில்லை என தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டும் தவறாகும். அரசால் ஒதுக்கப்பட்ட நிதியை, திரைப்படத் தணிக்கைக் குழு பயன்படுத்தவில்லை. இதனால், அந்த நிதியானது மீண்டும் அரசுக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.திரைப்படத் தணிக்கைக் குழுவால் ஒருபடம் நிராகரிக்கப்பட்டால், அதை எதிர்த்து மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்துக்குச் செல்லும் உரிமை திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கு உண்டு. ஆனால், மேல்முறையீட்டுத் தீர்ப்பாய உறுப்பினர் பதவியில் கூட காங்கிரஸ் அரசியல் செய்கிறது.
மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் தலைவராக முன்னாள் நீதிபதியை நியமித்து, அந்தப் பதவி மீது நம்பிக்கைத் தன்மையை ஏற்படுத்தினோம் எனத் தெரிவித்துள்ளார்.
வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ... |
எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ... |
பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.