மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றும் முறையை ஒழித்தல்

நாட்டின் எந்த மாவட்டத்திலும் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறை பின்பற்றப்படுவதாக தகவல் இல்லை என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு. ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அவர் அளித்த பதிலில், நாடாளுமன்றம் இயற்றிய ‘கையால் மனிதக் கழிவுகளை அகற்றும் தொழிலாளர்களை பணியமர்த்துவதை தடை செய்தல் மற்றும் அவர்களின் மறுவாழ்வு சட்டம், 2013 (MS Act, 2013)’, 06.12.2013 முதல் நடைமுறைக்கு வந்த்தாக கூறியுள்ளார்.

இச்சட்டத்தின் விதிகளின்படி, கையால் மனிதக் கழிவுகளை அகற்றுவது தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த தேதியிலிருந்து எந்தவொரு நபரும் அல்லது முகமையும் கையால் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் எந்த நபரையும் ஈடுபடுத்தவோ அல்லது பணியமர்த்தவோ கூடாது என சட்டம் கூறுகிறது. விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் அல்லது சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்றும் சட்டத்தில் குறிப்பிடப்படுகிறது.

கையால் மனிதக் கழிவுகளை அகற்றும் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் (எஸ்.ஆர்.எம்.எஸ்) கீழ் பல்வேறு பயன்கள் நீட்டிக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் தமது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அனைத்து மாவட்டங்களையும் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் பணியிலிருந்து விடுபட்டதாக அறிவித்துக் கொள்ளுமாறும் அல்லது சுகாதாரமற்ற கழிப்பறைகள் மற்றும் கையால் கழிவுகளை அகற்றும் தொழிலாளர்களின் விவரங்களை “தூய்மை இயக்கம்” கைபேசி செயலியில் பதிவேற்றம் செய்யுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது. இருப்பினும், இதுவரை செயலியில் நம்பகமான தரவு எதுவும் பதிவேற்றப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...

கெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்

உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ...

முருங்கைக் காயின் மருத்துவ குணம்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ...