இலங்கை தமிழர்களுக்கு பிரதமர் மோடி புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளார்

 பிரதமர் மோடி இலங்கை சுற்று பயணத்தை முடித்துக் கொண்டு நாடுதிரும்பி உள்ளார். அவரது சுற்றுப்பயணம் குறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:–

இந்திய பிரதமர் ஒருவர் 27 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கைசென்றது மட்டுமல்ல தமிழர்பகுதிக்கு சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற சாதனையையும் மோடி ஏற்படுத்தியுள்ளார்.

இலங்கை பாராளுமன்றத்தில் அந்நாட்டு அதிபர், பிரதமர், பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் உரையாற்றிய பிரதமர் மோதி இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை, சம அந்தஸ்து வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். உரிமை என்பது சட்டத்தால் கிடைப்பது. அந்தஸ்து என்பது மனதளவில் கிடைப்பது.

தமிழர்கள் பகுதிக்குசென்ற மோடி தமிழர்கள் இந்தியாவை நம்பலாம் என்ற வாக்குறுதியையும் அளித்துள்ளார். இந்திய நிதியில் கட்டப்பட்ட 27 ஆயிரம் வீடுகளை தமிழர்ளுக்கு ஒப்படைத்துள்ளார். மேலும் 47 ஆயிரம் வீடுகள் கட்டித் தரப்படும் என்று அறிவித்துள்ளார். வடக்கு மாகாணத்துக்கு நிலஉரிமையும், காவல்துறை அதிகாரமும் வரும் என்பதற்கு முன்னறிவிப்பாக அமைந்துள்ளது.

இலங்கை தமிழர்களுக்கு துரோகம்செய்த முன்னாள் அதிபர் ராஜபக்சேவை தண்டிக்க பலவழிகள் உள்ளன. அவர் இன்றுதான் தண்டிக்கப்பட்டதாக உணர்கிறார். தனது தோல்விக்கு இந்தியாதான் காரணம் என்று கூறுகிறார்.

இலங்கை தமிழர்கள் பெயரைசொல்லி அரசியல் நடத்துபவர்கள், கூக்குரலிட கூடியவர்கள் ராஜபக்சேவின் அறிக்கையையும், வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனின் அறிக்கையையும் படித்துதெளிவது அவசியம்.

இலங்கை தமிழர்களுக்கு பிரதமர் மோடி புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளார். புதிய பார்வையோடு புதிய துவக்கத்தை ஏற்படுத்தி உள்ளார். நிச்சயமாக இது இலங்கை தமிழர்கள் வாழ்வில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...

அமுக்கிரா கிழங்கு

இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் ...

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...