காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதல் களுக்காக பாகிஸ்தானை கண்டித்து சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காஷ்மீரில் 48 மணி நேரத்துக்குள் கதுவா ,சம்பா மாவட்டங்களில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புபடை வீரர்கள் உள்பட 7 பேர் கொல்லப் பட்டதுடன், பலரும் படுகாய மடைந்தனர்.
இதுகுறித்து கருத்துதெரிவித்த முதல்–மந்திரி முப்தி முகமது சயீத், 'இந்த தாக்குதலுக்கு காஷ்மீரை சாராதவர்களே காரணம்' என கூறினார். ஆனால் துணை முதல்மந்திரியும், பா.ஜ.க சேர்ந்தவருமான நிர்மல்சிங் கூறுகையில், இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானும், ஐஎஸ்ஐ. நிறுவனமுமே பொறுப்பு என்று கூறியிருந்தார்.
இந்த விவகாரம் நேற்று மாநில சட்டசபையில் எதிரொலித்தது. தீவிரவாத தாக்குதலுக்கு காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.,வை சேர்ந்த உறுப்பினர்களும் கடும்கண்டனம் தெரிவித்தனர். மேலும் பாகிஸ்தானுக்கு தகுந்தபதிலடி கொடுக்க வேண்டும் என அவர்கள் கோஷமிட்டனர்.
அப்போது பேசிய முதல்மந்திரி முப்தி முகமது சயீத், தீவிரவாத தாக்குதல்களுக்கு கடும்கண்டனம் தெரிவித்தார். இந்தியாவுடன் அமைதியையும், நட்புறவையும் பாகிஸ்தான் விரும்பினால், தீவிரவாதத்தை கட்டுப்படுத்தவேண்டும் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.
காஷ்மீரில் அமைதி திரும்பும் என நம்பிக்கை தெரிவித்தவர், இந்த தாக்குதலை கண்டிப்பது தொடர்பாக ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றுவதே எனது ஆலோசனை என்று கூறினார்.
உடனே, பாகிஸ்தான் ஆதரவு தாக்குதல்களுக்கு எதிராக சபையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என உறுப்பினர்களும் வலியுறுத்தினர்.
இதைத் தொடர்ந்து பாகிஸ்தானை கண்டித்தும், தீவிரவாத தாக்குதல் விவகாரத்தை பாகிஸ்தானிடம் எடுத்துச் செல்லுமாறு மத்திய அரசை வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ... |
கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ... |
நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.