தாக்குதல் நடத்தியது ஏன்: ஐ.நா., பாதுகாப்பு சபை உறுப்பு நாடுகளிடம் இந்தியா விளக்கம்

பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து ஐ.நா., பாதுகாப்பு சபை உறுப்பினர்களிடம் வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்து உள்ளது.

பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்ட பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் மற்றும் விமானப்படை குறிவைத்து தாக்குதல் நடத்தின. இதனைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பல நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகரை தொடர்பு கொண்டு விளக்கமளித்தார்.

இந்நிலையில், ஐ.நா., பாதுகாப்பு சபையில் இடம்பெற்றுள்ள 13 உறுப்பு நாடுகளின் உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகளை மத்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது விக்ரம் மிஸ்ரா கூறியதாக வெளியான தகவல்: ஏப்.,22ல் நடந்த பயங்கரவாத தாக்குதல், இந்தியாவை ஆத்திரமூட்டும் செயல்.பஹல்காமில் நடந்த தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பாவுடன் தொடர்புடைய டிஆர்எப் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றது. ஆனால், பிறகு பின்வாங்கியது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் ஐ.நா., சபையில் தீர்மானத்தை கொண்டு வர பாகிஸ்தான் கடுமையாக முயற்சித்தது. இதன் பின்னணியில் ஏதோ ஒரு சதி உள்ளது.பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடந்த தாக்குதல் குறிப்பிட்ட இலக்குகளை குறிவைத்து, கட்டுப்பாட்டுடன் நடத்தப்பட்டது. பயங்கரவாத முகாம்கள் மீது மட்டுமே தாக்கப்பட்டது.

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால், இந்தியாவும் தாக்குதல் நடத்தும். காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறியதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனிடையே , ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், கத்தார், பிரான்ஸ், ஜெர்மனி நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களை தொடர்பு கொண்ட நமது வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கமளித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பா ...

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பாஜக – சிவ சேனா’ கூட்டணி வசம் இந்தியாவின் பணக்கார மாநகராட்சியான மும்பை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண் ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண்டும் “மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் காட்டாட்சிக்கு விரைவில் ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்ச ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்சி திருவிழா பிரதமர் நரேந்திர மோடி இன்று குவஹாத்தியில் உள்ள லோகப்ரியா ...

S. I. R. உருப்படியான வேலையை முடித்த ...

S. I. R.  உருப்படியான வேலையை  முடித்திருக்கிறது தேர்தல் கமிஷன் S. I. R. மூலம் உருப்படியான ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மருத்துவ செய்திகள்

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...

தும்பையின் மருத்துவக் குணம்

தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ...