பாஜக தேசிய செயற்குழு கூட்டம் பெங்களூருவில் நடைபெற உள்ளது. இதையொட்டி உயர்மட்ட தலைவர்களின் கூட்டம் அங்கு நடைபெற்றுவருகிறது. பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா உள்பட மொத்தம் 330 தேசிய தலைவர்கள் கலந்துகொள்ளும்
தேசிய செயற்குழு கூட்டம் நாளை பெங்களூரில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நடைபெற உள்ளது. இந்தகூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து கலந்து ஆலோசிக்க தற்போது அமித்ஷா தலைமையில் உயர்மட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்தகூட்டத்தில் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்தகூட்டம் தேசிய அளவில் மிக முக்கியத்துவம் வாய்ந்தததாக கருதபடுகிறது.
இதில் குறிப்பாக 2016-ம் ஆண்டு 5 மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ளன. அந்த மாநிலத்தில் பாரதிய ஜனதாவை எப்படி வெற்றி பெறச்செய்வது என்றும், அது மட்டுமில்லாமல் அஸ்ஸாம், தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்களில் பாஜக.,வின் வளர்ச்சி குறித்து பேச உள்ளனர். மேலும் நரேந்திரமோடி பிரதமராக பதவியேற்ற பிறகு ஒருவருடத்தில் முக்கியமான நலத்திட்டங்கள் செயல் படுத்தினார்கள். இந்த திட்டங்கள் மக்களிடம் எவ்வாறு கொண்டுசேர்ப்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்ய உள்ளது.
நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ... |
இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.