கருத்து கணிப்பில், நரேந்திர மோடி அரசின் செயல் பாட்டுக்கு 69 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது வரை இந்தியாகண்ட பிரதமர்களில் மோடியே சிறந்தவர் என்றும் கூறியுள்ளனர்.
நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு பதவி ஏற்று, ஓராண்டு நெருங்கும் நிலையில், மக்களின் மனநிலை குறித்து இந்தியாடுடே குழுமமும், சிக்ரோ என்ற அமைப்பும் இணைந்து நாடுமுழுவதும் கருத்து கணிப்பு நடத்தி, முடிவுகளை வெளியிட்டுள்ளன.
அதன்படி, 69 சதவீதம் பேர், மோடி அரசு, எதிர்பார்த்ததைவிட சிறப்பாகவும், எதிர்பார்த்ததை போலவும் செயல்படுவதாக கருத்து தெரிவித்துள்ளனர். 25 சதவீதம் பேர், எதிர்பார்த்தது போல செயல்படவில்லை என்று கூறியுள்ளனர்.
இதுவரை இருந்த பிரதமர்களில் சிறந்தவர் என 30 சதவீதம் பேரின் ஆதரவுடன் முதலிடத்தை பிடித்துள்ளார், மோடி. முன்னாள்பிரதமர் வாஜ்பாய் 20 சதவீத ஆதரவுடன் இரண்டாம் இடத்தையும் , இந்திரா காந்தி 13 சதவீத ஆதரவுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
மோடி, வளர்ச்சி ,நல்ல நிர்வாகத்தின் பிரதிநிதியாக உள்ளதாக 52 சதவீதம் பேரும், இந்துத்துவாவின் பிரதிநிதியாக இருப்பதாக 16 சதவீத பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆர்எஸ்எஸ்.சின் கட்டுப்பாட்டில் மோடி இருப்பதாக 36 சதவீதம் பேரும், அப்படி இல்லை என 39 சதவீத பேரும் கூறியுள்ளனர்.
மோடி அரசால் பொருளாதாரம் முன்னேறி உள்ளதாக 36 சதவீதம் பேரும், முன்னேறவில்லை என 29 சதவீதம் பேரும் கருத்து தெரிவித் துள்ளனர்.
விலை வாசி பிரச்சினையில் முதலில் கவனம் செலுத்தவேண்டும் என 27 சதவீத பேரும், ஊழல் ஒழிப்பில் முதலில் கவனம் செலுத்தவேண்டும் என 24 சதவீதம் பேரும், ராமர் கோவிலுக்கு முன்னுரிமை தர வேண்டும் என 3 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.
மோடி அரசின் 10மாத சாதனையாக, இந்தியாவின் கவுரவம் சர்வதேசளவில் உயர்ந்தது என்பதை 34 சதவீத பேரும், ஊழலை ஒழித்தது என்பதை 13 சதவீத பேரும் கூறியுள்ளனர்.
பிரதமரின் வெளிநாட்டு பயணங்களை விரும்புவதாக 44 சதவீத பேரும், அவர் வெளிநாட்டு பயணங்களை குறைத்து கொள்ளவேண்டும் என்று 39 சதவீதம் பேரும் கருத்து தெரிவித் துள்ளனர்.
இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ... |
நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ... |
முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.