எங்கள் குறைகளை கண்டுபிடிப்பதற்கு முன்பாக உங்கள் தலைவரை கண்டு பிடியுங்கள்

 நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் உள்ள குறைகளை கண்டு பிடிப்பதைவிட காணாமல் போன தலைவரை கண்டுபிடியுங்கள் என பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா காங்கிரஸை கடுமையாக தாக்கிப் பேசினார்.

பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் பெங்களூருவில் உள்ள லலித் அசோக் ஓட்டலில் நேற்று காலை தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். இதில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அருண்ஜேட்லி, மூத்த தலைவர்கள் முரளி மனோகர் ஜோஷி, எல்கே.அத்வானி உட்பட 111 தேசிய செயற் குழு உறுப்பினர்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் கலந்துகொண்டனர்.

பாஜக தேசிய செயற்குழு கூட்டத்துக்கு தலைமை ஏற்று அமித்ஷா பேசியதாவது:

காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 10 ஆண்டு கால ஊழல் ஆட்சியை மோடி தலைமையிலான பாஜக முடிவுக்கு கொண்டுவந்தது. இப்போது நாட்டில் ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை. அடுத்த 10 முதல் 20 ஆண்டுகளுக்கு மோடியே ஆட்சியில் இருப்பார்.

தற்போது காங்கிரஸ் தன்னம்பிக்கை இழந்து தவிக்கிறது. மத்திய அரசில் இல்லாத குறைகளை எல்லாம் சல்லடைபோட்டு தேடி கண்டுபிடிக்கிறது. காங்கிரஸ் கட்சியினர் ஏதாவது கண்டுபிடித்தே தீரவேண்டும் என விரும்பினால் ஓர் ஆலோசனை தருகிறேன். குறைகளை கண்டு பிடிப்பதை விட காணாமல் போன உங்களுடைய தலைவரைத் தேடலாம்.

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐ.மு.,கூட்டணி ஆட்சியில் கொள்கை முடிவுகளை எடுப்பதில் தேக்க நிலை காணப்பட்டது. மேலும், ஊழல்கள் மலிந்திருந்தன. காங்கிரஸ் ஆட்சியில் நிலக்கரிச்சுரங்க ஏலம், 2ஜி அலைக் கற்றை ஏலத்தில் அரசுக்கு கோடிக் கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது. ஆனால், மத்திய அரசு அண்மையில் நடத்திய நிலக்கரி ஏலத்தில் அரசு கருவூலத்திற்கு ரூ.2 லட்சம்கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதேபோல, அலைக்கற்றை ஏலத்தில் ரூ.1.09 லட்சம் கோடி வருவாய் பெறபட்டுள்ளது.

பிரதமர் நரேந்திரமோடி ஆட்சியின் சாதனைகளை சகித்துக் கொள்ள முடியாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் விரக்திக்கு தள்ளப்பட்டுள்ளன. பாஜக. அரசுக்கு எதிராக வலுவான விமர்சனங்களை எடுத்துவைக்க முடியாததால், கற்பனையான குற்றச் சாட்டுகளைக் கூறி வருகின்றன.

கிராமங்களையும், பொது மக்களையும் பாதுகாக்க மத்திய அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது. விலைவாசி உயர்வு கட்டுப் படுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவில் உற்பத்தி செய்வோம், இந்தியாவில் திறன், வேலை வாய்ப்புத் திட்டங்கள், மக்கள் நிதித்திட்டம், முன் மாதிரி நகரத் திட்டம், தொழிலாளர் ஓய்வூதிய திட்டம், சுய வேலை வாய்ப்புத் திட்டம் போன்றவை மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்திய பொருளாதார மேம்பாட்டுக்கு பல்வேறு நடவடிக்கையின் காரணமாக , நாட்டின் வளர்ச்சி விகிதம் 4.4 சதவீதத்தில் இருந்து 7.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. தொழில், வியாபாரத்தில் இருந்த மந்த நிலை அகன்றுள்ளது. வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்துள்ளன. வெளிநாடுக ளுடனான உறவு மேம்பட்டுள்ளது. ஜூன் 21 ஆம் தேதியை உலகயோகா தினமாக அறிவிக்கும் அளவுக்கு மோடியின் மதிப்பு உலகளவில் உயர்ந்துள்ளது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 10 ஆண்டுகளாக நிலவி வந்த ஊழலுக்கு, பாஜக. அரசு முடிவு கட்டிவிட்டது. தற்போது எந்த இடத்திலும் ஊழல் நடைபெற வில்லை. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் செயல் பாடுகளால் மகிழ்ச்சியடைந்துள்ள மக்கள், அடுத்த 20 ஆண்டுகளுக்கு மத்தியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பாஜக. ஆட்சிக்கு ஆதரவு அளிப்பார்கள். மோடி ஆட்சியில் இந்தியாவின் தோற்றம் முழுமையாக மாறப் போகிறது" என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...