மத்திய அமைச்சர்கள் 29பேர் வரும் 9ந் தேதி தமிழகத்தில் முகாமிட உள்ளனர், பிரதமர் நரேந்திரமோடியும் அடுத்தமாதம் தமிழகம் வர உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழிசை செளந்தர ராஜன் கூறியுள்ளதாவது: மக்களிடம் குறைகளை கேட்டறிவதற்கு மத்திய அமைச்சர்கள் வரும் 9ந் தேதி தமிழகத்துக்கு வர உள்ளனர். இதில் வெங்கையா நாயுடு, ரவிசங்கர்பிரசாத், ஹர்ஷ் வர்தன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட 29 மத்திய அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர்.
அதேபோல குஜராத் முதல்வர் ஆனந்தி பென், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தராராஜே, ஹரியாணா முதல்வர் மனோகர்லால் கத்தார் ஆகிய 3 மாநில முதல்வர்களும் வர உள்ளனர். தமிழகத்தின் 32 மாவட்டங்களுக்கும் செல்லும் இவர்கள் மக்களை நேரில்சந்தித்து மனுக்களைப்பெற உள்ளனர்.
மக்கள் நலனை கருத்தில்கொண்டு மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் ஒரேநாளில் தமிழகத்துக்கு வருகைதருவது, வேறு எந்த மாநிலத்துக்கும் கிடைக்காத வாய்ப்பு. பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து அந்தந்ததுறை அமைச்சரிடம் தான் மனுக்களை அளிக்க வேண்டும் என்றில்லை. பிறதுறை அமைச்சரிடமும் மனுக்களை அளிக்கலாம். அந்த மனுக்களும் உரியவகையில் பரிசீலிக்கப்படும்.
அதேபோல, பிரதமர் நரேந்திர மோடியும் வரும் ஜூன் மாதத்தில் தமிழகத்துக்கு வர உள்ளார். அவர் வரும்தேதி இன்னும் இறுதி செய்யப்பட வில்லை. என்று தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.
அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ... |
இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ... |
பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.