புதிய வரலாறு படைக்கும் பிரதமர்

 ஐந்து நாட்டில் பயணமாக இந்திய பிரதமர் மோடி செஷல்ஸ், மோரீஷஸ், இலங்கை ஆகிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின் நோக்கம் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை, மாறாக வலுவான நட்புறவு கொள்வதற்காக மேற்கொள்ளப் பட்ட பயணம் என

தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக 10.3.2015ந் தேதி பிரதமர் மோடி அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் "இந்தியப் பெருங்கடல் பகுதியில் இருக்கும் செஷல்ஸ்,மோரீஷஸ், இலங்கை ஆகிய நாடுகளில் நான் மேற்கோள்ளவிருக்கும் சுற்றுபயணத்தில் இருந்து இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் இந்த நாடுகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ளலாம். இந்தப் பிராந்தியத்தில் அமைந்துள்ள நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்துவதற்கு இந்தியா அதிக முக்கியத்துவம் அளிக்கிறது." என குறிப்பிடப்பட்டுள்ளது. இது பற்றிய ஒரு விரிவான கண்ணோட்டத்தை காண வேண்டும்.

இந்த நாடுகள் இந்தியாவை விட பொருளாதாரத்திலும், வலிமையிலும் சமமானவை அல்ல என்பது அனைவருக்கும் தெரிந்து கொள்ளவேண்டும். இந்த நாடுகள் இந்தியாவின் பாதுகாப்பிற்கு முக்கியமானது என கூறுவதற்கு காரணம், சீனா பல ஆண்டுகளாகவே இப்பகுதிகளில் தங்களின் மேலான்மையை நிலை நாட்ட பல முயற்சிகளை எடுத்து வருகிறது.

இந்திய பொருளாதாரத்திலும்,சீனப் பொருளாதாரத்திலும்,இந்த மகா சமுத்திரப் பகுதி வெளிநாட்டு வணிகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்தப் பகுதியாக இருக்கிறது. ஐரோப்பாவுடன் சீனா செய்யும் வணிகத்தில் 67 சதவீதம் மலாக்கா ஸ்ட்ரெய்ட்ஸ், இந்து மகா சமுத்திரப் பகுதி, சூயஸ் கால்வாய் வழியாகவே நடக்கிறது. சீனாவின் எரிசக்தி தேவைக்கு 60 சதவீதத்திற்கும் மேலாக ஆப்ரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலையில் உள்ளது.

இதன் காரணமாக சீனாவில் அரசியல், இராணுவம், பொருளாதாரம்,வியாபாரம், பாதுகாப்பு ஆகியவற்றின் கொள்கைகள் இதனை ஒட்டியே அமையக் கூடும் என ஆய்வாகார்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். இந்த கருத்து ஏற்பட முக்கியமாக, மியான்மர், தாய்லாந்து, லாவோஸ் ஆகிய நாடுகளின் வழியாக செல்லும் மொகாங் நதியில், செல்லும் சீனச் சரக்குகளுக்கு பாதுகாப்பாக இந்த நாடுகளின் உள்ளேயே சீன இராணுவ போலீஸ் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த நாடுகளின் இறையாண்மையை கேள்விக்குள்ளாக்கும் வகையில் சீனா இந்த நாடுகளை மிரட்டி உருட்டி சம்மதிக்க வைத்துள்ளது. இதே போக்கை இந்த மகா சமுத்திர பகுதியில் உள்ள நாடுகளிலும் கடைபிடிக்க கூடிய சூழல் ஏற்பட்டால், அது இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைய கூடும் என்பதால் செஷல்ஸ், மோரீஷஸ், இலங்கை நாடுகளை முக்கியனாமதாக கருத வேண்டியுள்ளது என்பதை மோடி நன்கு உணர்ந்திருக்கிறார்.

இந்தக் கடல் வழிகளில் இந்திய கடற்படை வலிமையுள்ளது,அபாயகரமானது ஆகும் என சீன ஆய்வாளர்கள் கருதுகின்றனர். எனவே சீனாவில் கடல்துறை மற்றும் கடற்படையைக் கொண்டு இந்த மகா சமுத்திரப் பகுதியை தனதாக்கிக் கொள்ள, செஷல்ஸ், மோரீஷஸ், இலங்கை ஆகிய நாடுகளுடன் நட்புறவு கொள்வதுடன், அவர்களின் புணரமைப்பிற்கு நிதி உதவி கொடுப்பதும் நடந்து கொண்டு இருக்கிறது. இதற்காக இந்தியாவைச் சுற்றி துறைமுக அபிவிருத்தி முத்துகளைக் கோர்த்து அதன் அடுத்த கட்டமாக இராணுவத் தளங்களை நிறுவுவதே சீனாவின் உத்தியாக இருக்குமென்று இந்திய ஆய்வாளர்கள் திடமாக நம்புகிறார்கள். உலகில் எந்த நாடும் எந்த நிலையிலும் தனது பக்கத்து நாட்டுக்கு அணு ஆயுத நுணுக்கங்களை வழங்குதல், சோதித்தல் போன்றவற்றை செய்யாது. ஆனால் சீனா மட்டிமே பாகிஸ்தானுக்கு உதவி புரிந்துள்ளது. இது இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்பது உண்மை.

கடந்த சில ஆண்டுகளாகவே, சீனா தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட பல்வேறு முயற்சிகளில் இறங்கியுள்ளது. தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பான சார்க் அமைப்பின் வருடாந்திர கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக ஆஸ்த்ரேலியா, ஈரான், அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் பார்வையாளர்களாக அழைக்கப்படுவார்கள். அண்மையில் நடந்த சார்க் மாநாட்டில் பார்வையாளராக கலந்து கொண்ட சீனா தன்னையும் ஒரு உரையாடல் கூட்டாளியாக (Dialog partner) சேர்க்க வேண்டும் என தனது விருப்பத்தை தெரிவித்துள்ளது. இதற்கு இந்துயாவுக்கு எதிரிகளாகவே செயல்படும் பாகிஸ்தான் மற்றும் பங்காள தேஷ் தனது ஆதரவினை தெரிவித்துள்ளது. சீனா இதில் இணைந்தால், சார்க் நாடுகளின் கூட்டமைப்பில் இந்தியாவின் குரல் ஒடுக்கப்படும் என்பதை மோடி நன்கு உணர்ந்துள்ளார். ஆகவே இந்த பயணத்தின் மூலம் ஒரு தடுப்பு நடவடிக்கை எடுக்க முற்பட்டுள்ளார்.

சீனா தெற்காசியப் பகுதிகல் பெருமளவு இராணுவ, பொருளாதார, ராஜதந்திர பலத்தை பெருக்கியிள்ளது. இந்து மகா சமுத்திரப் பகுதியில் உள்ள சிறிய தீவுகளில் உள்ள அரசுகள் பொரும்பாலும் இராணுவப் பலத்தை கொண்டே அரசாளுகின்றன. இராணுவத்தைக் கைக்குள் போட்டுக் கொண்டால் அந்த அரசுகள் சொன்னப்படி கேட்டுதான் ஆக வேண்டும் என்கிற தந்திரமான வழியை சீனா கையாண்டு வருகிறது. செஷல்ஸ் தீவிலும் புதியதாக ஒரு இராணுவ தளம் அமைக்க இருப்பதாக சீனா அறிக்கை விடுத்துள்ளது. தன்னுடைய கட்டுபாட்டிற்கு செஷல்ஸ் மற்றும் மோரீஷஸ் நாடுகளையும் கொண்டு வர உறுதியான நடவடிக்கைகளை எடுக்க துவங்கியுள்ளது. இந்து மகா கடலில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்த மோரீஷஸ் நாட்டுக்கு 1.3 பில்லியன் டாலர் உதவி அளிக்க முன்வந்துள்ளது.

சில சம்பவங்களை குறிப்பிட்டு கூறலாம், சென்ற ஆண்டு ரஷ்யாவிலிருந்து இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்ட ஐ.என்.எஸ்.விக்கரமாதித்தியா விமானம் தாங்கி கப்பலை, சீன அணு ஆயுதம் தாங்கிய கப்பல் தொடர்ந்து கண்காணித்து வந்தது. மேலும் இந்து மகா சமுத்திரத்தின் பகுதியில் சீனாவில் அணு ஆயுதம் தாங்கிய நீர்முழ்கி கப்பல்கள் அதிக அளவில் நடமாடுவதாக இந்தியா கண்டனம் தெரிவித்த போது, கடற் கொள்ளையர்களை கட்டுப்படுத்தவும், தடுக்கவும் நடமாடுவதாக ஒரு நாடகம் ஆடியது.

இலங்கை பிரச்சனையில் மோடி அரசு எடுத்துள்ள நடவடிக்கை பாராட்டுதலுக்குறியது.இலங்கையில் புதிய அரசு வந்தவுடன், இந்தியாவிற்கு வருகை தந்த சிறிசேனாவிடம் மோடி அரசு சில விஷயங்களை மனம் திறந்த நிலையில் விவாதுத்தது. இலங்கை துறைமுகங்களில் சீன நீர்முழ்கி கப்பல்கள் தங்கிச் சென்ற விவகாரத்தை சிறிசேனவிடம் தெரிவித்தார்.

இதனால் சீனாவிற்கு சுற்றுப் பயணத்தை மேற்கொண்ட இலங்கை விளியுரவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீரா பத்திரிக்கையாளர்களிடம் கூறும் போது, சீன நீர்முழ்கி கப்பல்களை இலங்கையில் இனிமேல் அனுமதிக்க மாட்டோம் என்றார். இதுவும் மோடி அரசு இலங்கை பயணம் மேற்கொள்ள ஏதுவானது.

பல சந்தர்ப்பங்களில் இலங்கை அரசு தெளிவாக கூறியதை நினைவு படுத்த வேண்டும்.பல வெளிநாட்டு பிரதிநிதிகளிடம், இந்தியா எங்களிம் உறவு நாடு, சீனா எங்களின் நட்பு நாடு என கூறியும் முந்தைய காங்கிரஸ் அரசு, தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளில் எதிர்ப்பின் காரணமாக முறையான உறவை வளர்க்கவில்லை. இதன் காரணமாக சீனாவில் ஆதிக்கம் அதிக அளவில் இலங்கையில் கால் ஊன்ற வழி வகுத்தது. இதை நன்கு உணர்ந்த மோடி, இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தை தடுக்கும் வகையில் இந்த சுற்றுப் பயணத்தை நன்கு பயன்படுத்தி கொண்டார்.

கருப்பு பண விவகாரத்தில், இந்தியாவில் வரி ஏமாற்றி சேமித்த பணத்தை மோரிஷஸ் மற்றும் செஷல்ஸ் நாடுகளில் சேமித்து வைத்திருக்கிறாகள். இது பற்றியும் சுமுகமான பேச்சு வார்த்தை நடத்தும் மோடி சுற்றுபயனத்தை மேற்கொண்டார். இரு நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தை தவறாக பயன்படுத்தி,அந்நிய நேரடி முதலீடு என்ற பெயரில் மோரீஷஸ் வங்கிகள் மூலமாக இந்தியாவில் கருப்பு பணத்தை முதலீடு செய்கிறார்கள். இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் மோதி அரசு செயல்பட்டது. இதற்கு அடிப்படையாக இரட்டை வரி தடுப்பு ஒப்பந்தத்தை பயன்படுத்தி வரி ஏய்ப்பு செய்வது தடுக்கப்பட சில திருத்தங்கள் செய்து கொள்ள இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளது.

ஆகவே இந்த ஐந்து நாட்கள் சுற்றுப் பயணம் என்பது இந்திய வரலாற்றில் முக்கியமான திருப்பங்களை ஏற்படுத்தக் கூடியது என்றால் மிகையாகாது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.

எலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க

நோய் எதிர்ப்புச்  சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது  எலும்பு மஜ்ஜை ...

அவக்கேடோவின் மருத்துவக் குணம்

ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ...