முதல்வர் ஜெயலலிதா அவர்களின் தேர்தல் பிரச்சாரத்திற்காக பள்ளிகளுக்கு விடுமுறை அளித்த தமிழக அரசின் கல்வித்துறை, சர்வதேச யோகா தினத்தை அரசுப் பள்ளிகளில் வலியுறுத்தாமல் விட்டது ஏன்?
யோகக்கலை இந்திய நாடு உலகிற்கு அளித்த கொடை. இந்தியாவில் தோன்றிய பொக்கிஷம். உலகமெங்கும் சுமார் 197 நாடுகளில் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஐ.நா.சபையின் வேண்டுகோளை ஏற்று 87 நாடுகளில் கொண்டாடப்பட்டு உலக சாதனை எனப்படும் கின்னஸ் பட்டியலில் இடம் பிடித்த உலக யோகா தினம், நம் தாய்த்திரு தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் அரசு நிகழ்ச்சியாக கொண்டாடப்படவில்லை என்பது மன வருத்தம் தருகிறது. தமிழக அரசின் இந்தச் செயல் தமிழக மக்களின் ஆரோக்கியத்தில் எள்ளளவும் அக்கறை இல்லாத அரசு என்பதனை பறைசாற்றுகிறது.
உடல்நலத்திற்கு கேடு தரும் மதுவை அரசாங்கம் விற்றுக் கொண்டு டாஸ்மாக்கில் மட்டும் பாஸ்மார்க் வாங்கும் அரசு, உடல்நலம் பேணும் யோகா தினத்தை கொண்டாட மறந்ததில் ஆச்சரியமில்லை. மக்கள் நலம் மறந்த அரசு என்பது நிரூபணம் ஆகிறது.
இல்லையெனில் – சூரியநமஸ்காரத்திற்கு மதசாயம் ப+சி, அதில் குளிர்காய நினைக்கும் குறுமதியாளர்களின் மிரட்டலுக்கு தமிழக அரசு பயந்து விட்டதா?
யோகாதினத்தை கொச்சைப்படுத்தி, நாயுடன் ஒப்பிட்ட கம்ய+னிஸ்ட்டு தலைவர் சீத்தாரம் யெச்சூரி – இந்த வள் பேச்சோடு லொல்லு பேசும் லல்லுபிரசாத் போன்றவர்கள் மத்தியில், யோகாதினத்தை கொண்டாடிய கர்நாடக முதல்வரையும், டில்லி முதல்வரையும், தமிழக எதிர்கட்சி தலைவர் கேப்டன் விஜய்காந்த் முன்னாள் அமைச்சர் அன்புமணி, முன்னாள் துணை முதல்வர் ஃ தளபதி ஸ்டாலின் அவர்களுக்கும், பாரிவேந்தர் மற்றும் தமிழகமெங்கும் கொண்டாடிய பரந்த உள்ளங்களுக்கும் நன்றி. யோகா தினத்தை கொண்டாடிய எண்ணற்ற இஸ்லாமிய நாடுகளின் நல்ல உள்ளவர்களுக்கும நன்றி. யோகா தினம் ஒரு நாள்; நிகழ்வல்ல தினம் தினம் செய்ய வேண்டும் யோகம்.
தன்னாட்டு மக்கள் மாணவர்கள் அடுத்த தலைமுறையும் சேர்த்து உலக மக்களும் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று அடுத்த தலைமுறை நலம் வாழ நினைத்து செயல்பட்ட பாரதப் பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி.
உலக யோகா தினம் என்ற ஓர் தினம் ஒரு நாள் கடைபிடிக்க வேண்டிய நிகழ்ச்சி அல்ல. தினம் தினம் கடைபிடிக்க வேண்டியது.
இப்படிக்கு
என்றும் மக்கள் பணியில்
(டாக்டர் .தமிழிசை சௌந்தரராஜன்)
Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ... |
Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ... |
ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.