சென்னை தனியார் மருத்துவ மனையில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப் பட்டிருந்த, இசையமைப்பாளர் எம்.எஸ்., விஸ்வநாதன், இன்று அதிகாலை 4.15 மணிக்கு காலமானார். சென்னை சாந்தோமில் உள்ள அவரது இல்லத்தில் உடல் வைக்கப் பட்டுள்ளது.
87 வயதான விஸ்வநாதன், 1200 திரைப் படங்களுக்கு இசை அமைத்துள்ளார். ராம மூர்த்தி உடன் 700 படங்களுக்கும் தனியாக 500 படங்களுக்கும் இசை அமைத் துள்ளார். தமிழ் தாய் வாழ்த்துப்பாடலான ‛நீராரும் கடலுடத்த..' பாடலுக்கு இசையமைத்த பெருமைக் குரியவர் எம்.எஸ்.வி., இவரது இறுதிச்சடங்கு பெசன்ட் நகர் மின்மயானத்தில் நாளை நடைபெறுகிறது.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
எம்.எஸ்.வி. மறைவு குறித்த இரங்கல் குறிப்பில் கூறியுள்ளதாவது , "இசை மாமேதை எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
திரை இசைக்கு உயிர் ஊட்டி கொண்டிருந்தவர் உயிர் துறந்து படுத்து இருப்பதை பார்த்து பதை பதைக்கிறது நெஞ்சம். பாடிக் கொண்டிருந்த வாய் மூடிக்கிடப்பதும் தாளமிட்டு கொண்டிருந்த கைகள் துவண்டு கிடப்பதையும் பார்ப்பதற்கு நெஞ்சுறுதி வேண்டும்.
அவரது இழப்பை தாங்கிக்கொள்ளும் உறுதியை, தமிழக மக்களுக்கும் திரை உலகத்தினருக்கும் அவர் குடும்ப தாருக்கும் இறைவன் அருளவேண்டும். இசைத் துறையில் பல நட்சத்திரங்களை உருவாக்கிய அந்த மாமேதைக்கு அந்ததுறையில் பல இளைய தலை முறையினர்களை ஊக்கபடுத்துவதும் உருவாக்குவதுமே இச்சமுதாயம் செலுத்தும் அஞ்சலியாக இருக்கமுடியும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ... |
சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ... |
ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ... |
Leave a Reply
You must be logged in to post a comment.