மும்பையில் நடைபெற்ற பாடகி லதாமங்கேஷ்கரின் இறுதி சடங்குகளில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.
இந்திய சினிமாவில் பலமொழிகளில் இன்றும் ரசிக்கும் படியான பல நூற்றுக்கணக்கான பாடல்களை பாடியுள்ள பிரபல பாடிகியான லதாமங்கேஷ்கர் இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்பட்டவர். பழம்பெரும் பாடகியான இவர் கடந்த சில வாரங்களாக உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள ப்ரீச்கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். நேற்று மாலை மீண்டும் மோசமானது. தொடர்ந்து, இன்று காலை அவரது உயிர்பிரிந்தது.
லதா மங்கேஷ்கர் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மாநில முதலமைச்சர்கள், மாநில ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர் உள்ளிட்ட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
லதா மங்கேஷ்கருக்கு மரியாதை செலுத்தும்வகையில், இன்றும் நாளையும் இரண்டு நாட்கள் அரசுசார்பில் துக்கம் அனுசரிக்கப்படும், இதன் போது இந்தியா முழுவதும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், லதாமங்கேஷ்கர் இறுதி சடங்குகளில் பங்கேற்க டெல்லியில் இருந்த மும்பை வந்தார் பிரதமர் மோடி. பின்னர், மும்பை சிவாஜி பூங்காவில் நடந்த லதா மங்கேஷ்கரின் இறுதிசடங்குகளில் பங்கேற்றவர், உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது. |
பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ... |
நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ... |