‘மருமகன்’ முதல் குவாத்ரோச்சி வரை அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கத் தயார்

 காங்கிரஸ் ஆளும் மாநில ஊழல்கள் மட்டுமல்லாமல் 'மருமகன்' முதல் குவாத்ரோச்சி வரை அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கத் தயார் என பாஜக கூறியுள்ளது

நடாளுமன்ற மழைக் கால கூட்டத்தொடர் நேற்று தொடங் கியது. இதில், சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோரை பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இவர்கள் பதவி விலகும்வரை நாடாளுமன்றத்தை செயல்பட விடமாட்டோம் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடு நேற்று செய்தியாளர்களிடம் கூறும் போது, "காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து விவாதிக்கக்கோரி பாஜக எம்பிக்கள் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். எல்லா பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க அரசு தயாராக உள்ளது. எங்களிடம் மறைப்பதற்கு ஒன்றும்இல்லை. அதனால் எங்களுக்கு எந்தக்கவலையும் இல்லை" என்றார்.

நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறியதாவது:

மருமகன் (சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா நிலபேரம்) முதல் குவாத்ரோச்சி (போபர்ஸ் ஊழல்) விவகாரம்வரையில் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க அரசு தயாராக உள்ளது.

மேலும் கேரளாவில் நடை பெற்ற மாட்டு தீவன ஊழல், கோவாவின் நீர்விநியோக திட்ட ஊழல், உத்தராகண்ட் வெள்ளநிவாரண ஊழல், இமாச்சலப் பிரதேசத்தின் உருக்கு ஊழல் உட்பட அனைத்து பிரச்சினைகள் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு தயாராக உள்ளது.

இந்தக் கூட்டத் தொடரை நடத்த விடாமல் காங்கிரஸ் கட்சி அமளியில் ஈடுபடுவதால் முக்கியமான மசோதாக்கள் நிறைவேறுவது தாமத மாகிறது. இந்த மசோதாக்கள் எல்லாம் பாஜகவின் நலனுக்கானது அல்ல. நாட்டுமக்கள் மற்றும் ஏழைகளின் நலனுக்கானதாகும். இவ்வாறு நக்வி தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் 56 அங்குல மார்பு 5.6 அங்குலமாகக் குறைந்துவிடும் என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கூறியிருந்தார். இதுகுறித்து மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறும்போது, "இது பொருத்தமற்றது. தங்கள் கட்சி எம்பிக்களின் எண்ணிக்கை 44 ஆகக் குறைந்தது ஏன் என்பது பற்றி காங்கிரஸ் சிந்திக்க வேண்டும்" என்றார்.

அரசு ஒரு அங்குல நிலத்தைக்கூட கையகப்படுத்த அனுமதிக்க மாட்டோம் என ராகுல்காந்தி கூறியிருந்தார். இதுகுறித்து நாயுடு கூறும்போது, "அவர் இவ்வாறு கூறியிருப்பதற்கு, நாடுவளர்ச்சி அடைவதை அனுமதிக்க முடியாது என்பதுதுான் பொருள். இதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

துறவியான மகனுக்கு கண்ணீருடன் பà ...

துறவியான மகனுக்கு கண்ணீருடன் பிச்சையிட்ட தாய்: யோகி ஆதித்யநாத் துறவியான மகனுக்கு கண்ணீருடன் பிச்சையிட்ட தாய்: யோகி ஆதித்யநாத் ...

மக்களின் ஒத்துழைப்பும் சேமிப்à® ...

மக்களின் ஒத்துழைப்பும் சேமிப்பும் பிரதமர் நரேந்திர மோடி தங்கம் வாங்குவதை ஓராண்டுக்குத் தவிர்க்குமாறு தான் விடுத்த கோரிக்கையை ...

அமைதி போராட்டத்திற்கும்,சட்டங௠...

அமைதி போராட்டத்திற்கும்,சட்டங்களை மீறுபவர்களுக்கும் வித்தியாசம் உண்டு அண்ணாமலை அவர்களின் கேள்விகள், அமைதியான போராட்டத்திற்கும், திட்டமிட்ட ரீதியில் ...

இந்​தி​யா​வுக்கு எதிரான சக்​தà® ...

இந்​தி​யா​வுக்கு எதிரான சக்​தி​களை தோற்​கடிக்க வேண்​டும் இந்தியாவுக்கு எதிரான சக்திகளை தோற்கடிக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திர ...

கருத்து வேறுபாட்டிற்கும் அராஜà® ...

கருத்து வேறுபாட்டிற்கும் அராஜகத்திற்கும் இடையிலான வேறுபாடு ஒரு ஜனநாயகத்தில் கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்தலாம், ஆனால் அந்தக் ...

விரத நாட்களின் பலன்கள்

விரத நாட்களின் பலன்கள் ஒரு நாள், மூன்று நாட்கள், ஐந்து நாட்கள், ஏழு ...

மருத்துவ செய்திகள்

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...