காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்கள் தேசவிரோத சக்திகளுக்கு ஆதரவாக செயல்படுகின்றன

தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக் கழக விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்கள் தேசவிரோத சக்திகளுக்கு ஆதரவாக செயல் படுவதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா குற்றஞ்சாட்டினார்.

இதுகுறித்து, அவர் கோவையில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

 தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் மாணவர் சங்க தலைவர் தேசவிரோத செயல்களில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், கைது செய்யப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா ஆகியோர் பேசி வருகின்றனர். இது போன்ற செயல்கள் மூலமாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் தேசவிரோத சக்திகளுக்கும், நாட்டைத் துண்டாட நினைக்கும் பிரிவினைவாத சக்திகளுக்கும் ஆதரவாகச் செயல்பட்டு வருகின்றன.

  தமிழகத்தில் காங்கிரஸ், திமுக கூட்டணி தமிழர்களுக்கு எந்த வித நல்ல திட்டங்களையும் செயல் படுத்தவில்லை .

 கெயில் எரிவாயுத்திட்டம் காங்கிரஸ், திமுக கூட்டணியில் கொண்டுவரப்பட்டது. எனினும் தமிழக விவசாயிகளின் நலனை பாதிக்கும் இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக பாஜக செயல்படும்.

சட்ட பேரவைத்தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின் ஏழை, எளிய மக்களுக்கான செயல்திட்டங்களை மக்கள் முன் எடுத்துச்செல்ல உள்ளோம். இந்தத் திட்டங்கள் குறித்து மார்ச் 1-ம் தேதி முதல் தமிழகத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநிலத்தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் ரதயாத் திரைப் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளனர்.

 கடந்த 60 ஆண்டுகளில் நதிகளை இணைப்பது தொடர்பான வெறும் அறிவிப்புகள்மட்டுமே வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், குஜராத்மாநிலத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு 16 நதிகளை இணைத்தது பாஜக அரசு.  அதேபோல, தமிழகத்தில் பாஜக ஆட்சிக்குவந்தால் அனைத்து நதிகளையும் ஒன்றிணைத்து விவசாயிகளின் நலைனைப் பாதுகாக்கும் என்றார்.

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...