எதிர்க் கட்சி தலைவர்களின் தூக்கம் கெட்டுள்ளது

உயர்மதிப்பிலான ரூபாய் நோட்டுகளுக்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளதால், ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி உள்ளிட்ட  எதிர்க் கட்சி தலைவர்களின் தூக்கம் கெட்டுள்ளது என்று பாஜக தேசியதலைவர் அமித்ஷா  தெரிவித்தார். பெங்களூரு, அரண்மனை  மைதானத்தில், பாஜ.வின்  பிற்படுத்தப் பட்டோர் பிரிவுசார்பில் சுதந்திர போராட்ட வீரர் சங்கொள்ளி  ராயண்ணா பிரிகேட் மாநாடு நேற்று நடைபெற்றது. மாநாட்டை தொடங்கிவைத்து  அமித்ஷா பேசியதாவது: சர்வதேச அளவில் மக்கள் தொகையில் இந்தியா இரண்டாவது   இடத்தில் உள்ளது. இதேபோல், நாட்டில் கனிம வளங்கள் குவிந்துள்ளன. ஆனால், பல ஆண்டுகள் நாட்டை ஆண்டவர்கள், கனிமவளங்களைக்  கொண்டு அரசு கஜானாவை  நிரப்புவதற்கான நடவடிக்கையில் ஈடுபட வில்லை. மாறாக, தங்களின் சொந்த கஜானாவை  நிரப்பிக் கொண்டனர்.   பலமாநிலங்களில் இதே நிலை நீடித்தது.

நாட்டு மக்கள்  வளர்ச்சி காணமுடியாத நிலை ஏற்பட்டது.  இதனால், ஆட்சிக்கு வந்த பிரதமர்  நரேந்திர மோடி மக்களின் நலன்காக்கவும்,  நாடு வளர்ச்சிகாணவும்,  அதிரடியாக ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை செல்லாது என அறிவித்தார். இதனால், காங்கிரஸ் துணைத்தலைவர்  ராகுல் காந்தி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களின் தூக்கம் கெட்டுள்ளது. அவர்கள் பிரதமரின்   நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்றம், மாநிலங்களவையில்  கூச்சல்குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இன்று  போராட்டத்துக்கும் அழைப்பு விடுத்துள்ளனர். கருப்புபண ஒழிப்பு விவகாரத்தில் நாட்டு மக்களுக்கு  தவறான வழியை காட்டி திசைதிருப்பும்  முயற்சியில் ஈடுபட்டுவரும்  எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் உரிய  நேரத்தில் பாடம் புகட்டுவார்கள்  என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...

சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும் வெள்ளரி காய்

வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ...