வதந்திகளை பரப்பி பாஜக அரசின் மீது புழுதி வாரி தூற்ற நினைப்பவர்களின் எண்ணம் ஒரு போதும் ஈடேறாது

நேற்று பல்வேறு  நாளிதழ்களில் ரயில்வே  துறையில் உணவு பண்டங்கள் வாங்குவதில்  மிக பெரிய ஊழல் நடந்து விட்டதாக செய்திகள் வெளியாகின. 100 கிராம் தயிர் ரூபாய் 972க்கும், 1 லிட்டர் சமையல் எண்ணெய் ரூபாய் 1241க்கும், 1 பாக்கெட் டாட்டா உப்பு ருபாய் 49க்கும் வாங்கியதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் ஒருவருக்கு ரயில்வே துறையிலிருந்து எழுத்து பூர்வமாக கொடுக்கப்பட்டிருக்கிறது என்று செய்திகளை வெளியிட்டது. காங்கிரஸ் கட்சியும் மற்ற எதிர் கட்சிகளும் இந்த ஊழல் குறித்து தங்களின் கண்டனங்களை வெளியிட்டதோடு, இதனால் தான் ரயில்வே 

 துறை நஷ்டத்தில் இயங்குவதாக சொல்லி தங்களின் எண்ணங்களுக்கு ஏற்ப பல்வேறு அறிக்கைகளை கொடுத்தது. ஆனால், இந்த மகிழ்ச்சி அவர்களுக்கு நிலைத்து நிற்கவில்லை. தகவல் கொடுக்கப்பட்டது தவறு என்றும்,  100கிராம் தயிர் உள்ள  108 தயிர்  கோப்பைகள் ரூபாய்  உள்ளடக்கிய அட்டை பெட்டி ரூபாய் 970 க்கு, அதாவது 100 கிராம் 8 ரூபாய் தொண்ணூறு காசுக்கும், 15 லிட்டர்  சமையல் எண்ணெய் டின், ரூபாய் 1241க்கும், அதாவது 1 லிட்டர் 82 ரூபாய், 70 காசுக்கும் வாங்கப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி எழுத்து பூர்வமாக தவறான தகவலை அளித்த நபர்களை இடைநீக்கம் செய்துள்ளதோடு மேலும் சிலர் மீதும் கடும் நடவடிக்கை எடுத்துள்ளது ரயில்வே அமைச்சகம்.

 

பாஜகவின் மீது காழ்ப்புணர்ச்சியோடு செயல்பட எதிர்க்கட்சிகள் துடிக்கலாம். ஆனால் சில ஊடகங்கள் பெரிய ஊழல் நடந்தது போன்ற ஒரு மாயையை எதிர்க்கட்சிகள் செய்ய முனையும் நேரத்தில் நாட்டின் நலன் கருதி உண்மை நிலையை ஆராய்ந்து செய்திகளை வெளியிட வேண்டியது அவைகளின் தார்மீக கடமை. வதந்திகளை பரப்பி விட்டு அதன் மூலம் குளிர்காயலாம் என்ற திட்டத்தோடு பாஜக அரசின் மீது புழுதி வாரி தூற்ற நினைப்பவர்களின் எண்ணம் ஒரு போதும் ஈடேறாது. நரேந்திர தாமோதர தாஸ் மோடி அவர்களின் தலைமையிலான பாஜக அரசை மேலும் மேலும் மக்கள் ஆதரிப்பார்கள் என்பது உறுதி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...