குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடந்து முடிந்தது

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு காலை 10 மணிக்கு தொடங்கியது. நாடுமுழுவதும் 776 எம்.பி.க்கள், 4,120 எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்கின்றனர். சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் பழனிச்சாமி, சபாநாயகர் தனபால், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வாக்களித்தனர். மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சென்னை தலைமைச் செயலகத்தில் வாக்களித்தார். தமிழக சட்டப் பேரவையில் எம்.எல்.ஏ.க்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

பிரதமர் மோடி, அமித்ஷா வாக்களித்தனர்

குடியரசுத் தலைவர்தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்தார். அதேபோல் நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக தேசிய தலைவர்அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் வாக்களித்தனர்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் யார் வெற்றிபெற்றாலும் மகிழ்ச்சிதான் என மாயாவதி கூறியுள்ளார். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் குடியரசுத் தலைவர் பதவிக்கு வருவதை வரவேற்கிறேன் என குடியரசுத்தலைவர் தேர்தலில் வாக்களித்த பிறகு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பேட்டியளித்துள்ளார். தாழ்த்தப்பட்ட வகுப்பைச்சேர்ந்தவர்கள் குடியரசுத் தலைவராவது எங்கள் போராட்டத்துக்கு கிடைத்தவெற்றி என்று கூறியுள்ளார்.

நாட்டின் 14வது குடியரசுத் தலைவர் தேர்வு செய்வதற்கான தேர்தல் முடிந்தது . இதில், பாஜ வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கும், எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் மீராகுமாருக்கும் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் எம்.பி.க்களும், சட்டப்பேரவைகளில்  எம்.எல்.ஏ.க்களும் ஓட்டளிக்கின்றனர். தேர்தல் முடிவு 20ம் தேதி தெரியும். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்கலாம் முடிவதால், நாட்டின் 14வது குடியரசுத் தலைவர் தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்தமாதம் 14ம் தொடங்கியது. தே.ஜ. கூட்டணி வேட்பாளராக, பீகார் மாநில ஆளுநராக இருந்த ராம்நாத்கோவிந்த்  நிறுத்தப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் ஒரு எம்பி.யின் ஒட்டுமதிப்பு 708. எம்.எல்.ஏ.க்களின் ஓட்டுமதிப்பு அந்தந்த மாநில மக்கள் தொகைக்கு ஏற்ப மாறுபடும். ஜனாதிபதி தேர்தலின் மொத்த ஓட்டுமதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்து 98 ஆயிரத்து 903. இதில், 50 சதவீதம் அதாவது 5 லட்சத்து 49 ஆயிரத்து 452 ஓட்டுக்கள் பெற்றால், அந்த வேட்பாளர் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...