குட்டி இளவரசன் செய்த சுட்டித்தனத்தை பார்த்து வியப்படைந்த மோடி

டெல்லி வந்துள்ள பூடான் மன்னர் ஜிக்மேகேசர் நம்கியேல், தனது குடும்பத்துடன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.   

 4 நாட்கள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள பூடான் மன்னர் ஜிக்மேகேசர், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அப்போது அவருடன் அவரதுமனைவி ஜெட்சன் பெமா மற்றும் தம்பதியரின் குட்டி இளவரசரும் உடனிருந்தனர். மன்னருடனான அதிகாரப்  பூர்வமான சந்திப்பிற்கு பிறகு, மோடி மன்னரின் குடும்பத்தினரிடம் உரையாடினார். பூடான் நாட்டின் பாரம்பரிய உடையில் வந்த குட்டி இளவரசர் அனைவரின் கவனத்தையும் தன்பக்கம் ஈர்த்தார். பின்பு மோடி, இளவரசருக்கு பிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பயன்படுத்தப்பட்ட கால்பந்து மற்றும் செஸ் போர்டு ஆகியவற்றைப் பரிசாக வழங்கினார். மோடி, மன்னருடன் பேசிக்கொண்டிருக்கும் போது குட்டி இளவரசன் செய்த சுட்டித்தனத்தை பார்த்து வியப்படைந்த மோடி அவரை தூக்கிக்கொஞ்சினார்.

முன்னதாக பூடான் மன்னர் ஜிக்மே கேசர் தனது மனைவி ஜெட்சன் பெமாவுடன் சென்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்துபேசினார். இந்தியாவிற்கு வருகை தந்த பூடான் குட்டி இளவரசரின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அனைவராலும் ரசிக்கப்பட்டு வருகிறது. வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்திலும் பூடான் மன்னர் குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.  
 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நூல்கள் நமது ஜனநாயகத்திற்கு கி ...

நூல்கள் நமது ஜனநாயகத்திற்கு கிடைத்த களஞ்சியங்கள் – சிவராஜ் சௌகான் நூல்கள் நமது ஜனநாயகத்திற்கு கிடைத்த களஞ்சியங்கள் என ஜனாதிபதி ...

காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் -பி ...

காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் -பிரதமர் மோடி ஆலோசனை காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் குறித்து பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை ...

தூத்துக்குடி-மேட்டுப்பாளையம் ...

தூத்துக்குடி-மேட்டுப்பாளையம் ரயில் சேவை L -முருகன் தொடங்கிவைத்தார் தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் இடையே புதிதாக வாரம் இரு முறை ...

இந்தியா -மலேசியா இருதரப்பு ஒத்த ...

இந்தியா -மலேசியா இருதரப்பு ஒத்துழைப்பை வேளாண்மை துறையில் அதிகரிக்க முடிவு இந்தியா, மலேசியா ஆகிய இருநாடுகளும், வேளாண்மை துறையில் குறிப்பாக, ...

நமது நம்பிக்கைகளுக்கான சிறகுக ...

நமது நம்பிக்கைகளுக்கான சிறகுகள் தொகுப்பு 1 நூல்களை சிவராஜ் சௌகான் வெளியிட்டார் "நமது நம்பிக்கைகளுக்கான சிறகுகள்" தொகுப்பு 1 (Wings to ...

தி.மு.க.வின் கொள்கைகளை மாணவ சமுத ...

தி.மு.க.வின் கொள்கைகளை மாணவ சமுதாயத்தின் மீது திணிப்பதை எதிர்க்கிறோம் -அண்ணாமலை ‛‛திமுகவின் கொள்கைகளை, மாணவ சமுதாயத்தின் மீது திணிப்பதை எதிர்க்கிறோம் ...

மருத்துவ செய்திகள்

“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)

நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ...

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...

எலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க

நோய் எதிர்ப்புச்  சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது  எலும்பு மஜ்ஜை ...