உ.பி., என்கவுன்ட்டருக்கு பயந்து சிறையை நோக்கி ஓடும் கிரிமினல்கள்

உத்தர பிரதேசத்தில் என்கவுன்ட்டருக்கு பயந்து இரவில் காவல் நிலையங் களிலேயே ரவுடிகள் தூங்குகின்றனர்.

உத்தர பிரதேசத்தில் கடந்த 370 நாட்களில் சுமார் 1,339 என்கவுன்ட்டர்கள் நடை பெற்றுள்ளன. கிரிமினல் குற்றவாளிகள் உட்பட 44 பேர் கொல்லப் பட்டுள்ளனர். உத்தர பிரதேசத்தின் மேற்குப் பகுதி கிரிமினல் நடவடிக்கைகள் நிறைந்தவை. அப்பகுதியின் நொய்டா, கிரேட்டர் நொய்டா, ஹாபூர், தாத்ரி, காஜியாபாத், அலிகர், புலந்த்ஷெஹர், மீரட், சஹரான்பூர், ஷாம்லி, முசாபர் நகர் ஆகியவற்றில் அதிகமான என்கவுன்ட்டர்களை காவல்துறையினர் நடத்தியுள்ளனர். இந்நிலையில் ஒரு என்கவுன்ட்டர்கூட நடைபெறாத, கிரிமினல் குற்றங்கள் அதிகரித்து வரும் பலமாவட்டங்களில் . அதன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களை இடமாற்றம் செய்ய  அரசு முடிவு செய்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.

கடந்த வாரம் முடிந்த ராம நவமி அன்றுமட்டும் 9 என்கவுன்ட்டர்கள் நடத்தப்பட்டுள்ளன. இது போன்ற கடுமையான நடவடிக்கையால் இதுவரையில் பிடிபடாமல் இருந்த கிரிமினல் குற்றவாளிகள் 3,140 பேர் கைதாகி சிறையில் தள்ளப்பட்டுள்ளனர். இவர்களில் 1,999 பேர் திருட்டு, கொள்ளை மற்றும் வழிப்பறி குற்றங்கள் செய்தவர்கள். 188 குற்றவாளிகள் தேசிய பாதுகாப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். 175 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அனைவரிடமும் சேர்த்து ரூ.147 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. என்கவுன்ட்டர் நடவடிக்கைகளில் 4 போலீஸார் வீரமரணம் அடைந்ததுடன் 57 பேர் காயமடைந்துள்ளனர்.

பாஜக ஆட்சியின் முதல் என்கவுன்ட்டர் புலந்த்ஷெஹரில் தொடங்கியது. இங்கு மாதந்தோறும் 60-க்கும் மேற்பட்ட வழிப்பறி, கொள்ளை, திருட்டு சம்பவங்கள் நடைபெற்ற நிலை மாறி தற்போது 5 அல்லது 6 குற்றங்கள் மட்டுமே நடைபெறுகின்றன. இங்கு 6 மாதங்களில் 28 என்கவுன்ட்டர்கள் நடத்தப்பட்டுள்ளன. 3 கிரிமினல்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த என்கவுன்ட்டர்களை முன்னின்று நடத்திய புலந்த்ஷெஹர் எஸ்எஸ்பியும் தமிழருமான ஜி.முனிராஜ்,  கூறும்போது, “ஆயுதங்களுடன் சுற்றும் கிரிமினல்களை பிடிக்கசென்றால் எங்கள் மீது தாக்குதல் நடத்துவது வழக்கம். உயிரை பணயம் வைத்து அவர்களை என்கவுன்ட்டர் செய்து பிடிக்கிறோம். ஜாமீனில் விடுதலையான பலரும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தனர். என்கவுன்ட்டருக்கு பயந்து கடந்த 3 மாதங்களில் 65 பேர் ஜாமீனை ரத்து செய்துவிட்டு சரணடைந்துவிட்டனர். அவர்கள் தற்போது சிறையில் உள்ளனர்” எனத் தெரிவித்தார்.

என்கவுன்ட்டருக்கு பயந்து இரவில் காவல் நிலையங்களிலேயே ரவுடிகள் தூங்குகின்றனர். சீதாபூரின் கிரிமினல்குற்றவாளியான ரஞ்சித் ஜாமீனில் வெளியே உள்ளார். இவர் தன்மீது எந்த பழியும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக, இரவில் லஹர்பூர் காவல் நிலையத்துக்கு வந்துதூங்குகிறார். இவருடன் மேலும் 7 கிரிமினல்களும் காவல் நிலையத்தில் தூங்குகின்றனர் என்று அதன் ஆய்வாளர் இந்திரஜித் சிங் கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு

பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ...

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...