வடகிழக்கு மாநிலங்களில் கூட்டணி அமைத்து விட்டடோம்

வடகிழக்கு மாநிலங்களில் கூட்டணி அமைத்து விட்டதாகவும், அங்கு மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 22 தொகுதிகளில் வெற்றியை இலக்காக நிர்ணயித்து ள்ளதாகவும் பாஜக பொதுச் செயலாளர் ராம்மாதவ் தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும் கூட்டணி பேச்சு வார்த்தைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பாஜகவின் பொதுச்செயலாளரும் வடகிழக்கு மாநிலங்களின் பாஜக பொறுப்பாளருமான ராம்மாதவ் செவ்வாய்கிழமை நள்ளிரவு வரை பிராந்திய கட்சிகளுடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு வந்தார்.

இதையடுத்து, வட கிழக்கு மாநிலங்களில் உள்ள அசோம் கண பரிஷத் (ஏஜிபி), போடோலாந்து மக்கள்முன்னணி (பிபிஎஃப்), திரிபுரா பழங்குடியின மக்கள் முன்னணி கட்சி (ஐபிஎஃப்டி), தேசிய மக்கள் கட்சி (என்பிபி), தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி (என்டிபிபி) மற்றும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா பாஜகவின் கூட்டணிகளை உறுதிசெய்தார்.

இதுகுறித்து, ராம் மாதவ் தனது பேஸ்புக் பதிவில், “வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள 25 தொகுதிகளில் 22 தொகுதிகளுக்கு குறையாமல் வெற்றிபெறும் திறன் இந்த கூட்டணிக்கு உள்ளது. மேலும், மோடியை மீண்டும் பிரதமராக பார்ப்பதற்கு இந்த கூட்டணி மிக முக்கியமான பங்கை வகிக்கும்.

நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இறுதியாக பாஜக மற்றும் வடகிழக்கு பிராந்தியத்தின் அனைத்து பிரதான கட்சிகளுக்கிடையிலான தேர்தல்புரிந்துணர்வு மற்றும் கூட்டணி உறுதியானது.

அசாம், மேகாலயா, மணிப்பூர் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் பாஜக, என்பிபி, என்டிபிபி, ஏஜிபி மற்றும் பிபிஎஃப் ஆகிய கட்சிகள் காங்கிரஸ் கட்சியை வீழத்தும் நோக்கத்தில் ஒன்றிணைந்து போட்டியிடவுள்ளது. திரிபுராவில் பாஜக, ஐபிஎஃப்டி கட்சியுடன் இணைந்து போட்டியிடுகிறது.

சிக்கிமில் பிரதான எதிர்க் கட்சியான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவுடன் கூட்டணி அமைத்து பாஜக போட்டியிடவுள்ளது” என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

உடல் எடை குறைய

தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ...

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ...