காந்தி அதிகாரத்துக்கு ஆசைப்படாத ஒரு மகாத்மா

கடந்த 1959ல், இந்தியா வந்த டாக்டர் மார்ட்டீன் லூதர்கிங் ஜூனியர், மற்ற நாடுகளுக்கு செல்லும் போது, நான் சுற்றுலா பயணியாக மட்டும் உணர்கிறேன். ஆனால், இந்தியா வரும்போது எல்லாம் யாத்ரீகனாக உணர்கிறேன். அகிம்சையற்ற சமூக மாற்றத்தின் தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்ட நிலமாக இந்தியா திகழ்கிறது. இதனைதான், அமெரிக்காவின், மாண்ட்கோமெரி, அலபாமா உள்ளடங்கிய தெற்குபகுதி மக்கள் பயன்படுத்துகின்றனர். அவை, திறமையானதாகவும், நீடித்ததாகவும் இருப்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம். அவ்வாறே அவைகளும் செயல்படுகின்றன எனக்கூறினார்.

மார்ட்டீன் லூதர் கிங்கிற்கு இந்தியா வழங்கிய வழிகாட்டியாக மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி எனப்படும், மஹாத்மா காந்தி திகழ்கிறார். அவரின் 150வது பிறந்தநாளை, அக்., 2ல் கொண்டாடுகிறோம். மஹாத்மா காந்தி, சர்வதேச அளவில், கோடிக்கணக்கான மக்களுக்கு தைரியம் வழங்குபவராக திகழ்கிறார். மஹாத்மாவின் அநீதிய எதிர்ப்புமுறைகள் பல ஆப்ரிக்க நாடுகளிடமும், நம்பிக்கையின் உணர்வைதூண்டின.

இதுதொடர்பாக மார்ட்டின் லூதர்கிங் கூறுகையில், ”மேற்கு ஆப்ரிக்காவின் கானாவிற்கு நான் சென்ற போது, அந்நாட்டின் பிரதமர் நக்ருமா, காந்தியின் படைப்புகளை படித்தார். வன்முறையற்ற அகிம்சை எதிர்ப்பை அந்நாட்டில் நீட்டிக்கமுடியும் என அவர் உணர்ந்தார்” எனக்கூறினார்.

மஹாத்மா காந்தியை ‘புனித வீரர்’ என குறிப்பிடும் நெல்சன்மண்டேலா, ”நம்மை ஆதிக்கம் செலுத்துபவர்களிடம் நாம்பேச்சிற்கு அழைப்பதில்தான் நமக்கான வீரம் உள்ளது என்ற மகாத்மாவின் கூற்று, தற்போதைய நூற்றாண்டில், சர்வதேசளவில் காலனித்துவ எதிர்ப்புக்கும், இனவெறிக்கு எதிரான போராட்டத்தை ஊக்கப்படுத்தின” என்றார். மண்டேலாவை பொறுத்தவரை காந்தி, இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்காவை சேர்ந்தவராக இருந்தார். இதற்கு காந்தியும் ஒப்புதல் அளித் திருந்தார். மனித சமுதாயத்தில் இருக்கும் மிகப் பெரிய முரண்பாடுகளுக்கு இடையில் ஒருபாலமாக மாறுவதற்கான தனித்துவமான திறனை காந்தி கொண்டிருந்தார்.

கடந்த 1925ல் ” யங் இந்தியா” நாளிதழில் காந்தி எழுதியதாவது: ”தேசிய வாதியாக இல்லாமல் ஒருவர் சர்வதேசவாதியாக இருக்க முடியாது. தேசிய வாதம், உண்மையாகும் போதுதான், சர்வதேசியவாதம் சாத்தியம் ஆகும். அதாவது, வெவ்வேறு நாடுகளைசேர்ந்த மக்கள், தங்களை ஒழுங்கமைக்கும் போது தான் மனிதத்துவமும், சர்வதேச மனித இனமும் செயல்படமுடியும்” என எழுதியுள்ளார். எனவே, இந்திய தேசிய வாதத்தை ஒருபோதும் குறுகியதாகவோ அல்லது பிரத்யோகமாகவோ, காந்தி கருதவில்லை. ஒட்டு மொத்த மனித குலத்தின் வெளிப்பாடாக தான் தேசிய வாதத்தை கருதினார்.

சமூகத்தில் உள்ள அனைத்து பிரிவினர் இடையே, நம்பிக்கை பெற்றவராக மஹாத்மாகாந்தி இருந்தார். 1917ல், குஜராத்தின் ஆமதாபாத்தில், ஜவுளி தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர்களுக்கும், உரிமையாளர்களுக்கும் இடையிலான மோதல், திரும்ப பெற முடியாத அளவுக்கு அதிகரித்தது. அப்போது, காந்தி தான் மத்தியஸ்தம் செய்து தீர்வு கண்டார். தொழிலாளர் உரிமைகளுக்காக, மசூர் மகாஜன் சங்கத்தை காந்தி உருவாக்கினார். அப்போது, சாதாரண அமைப்புகளில் ஒன்றாக தான் இதனை பார்த்தனர். ஆனால், அது பின்னாளில் பெரியமாற்றத்தை ஏற்படுத்தியதை உணர்ந்தனர். அந்நாட்களில், வசதி படைத்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் தலைப்பாக ”மகாஜன்” என்ற வார்த்தை பயன் பட்டது. ஆனால், ” மகாஜன்” என்ற பெயரை ”மஜூர்” அல்லது தொழிலாளர்கள் என காந்தி மாற்றினார். இதன் மூலம் சமூக கட்டமைப்பை தலைகீழாக மாற்றினார். இதன்மூலம், தொழிலாளர்களின் பெருமையை காந்தி உறுதிப்படுத்தினார்.

சாதாரண பொருட்களையும், வெகுஜன அரசியலுடன் காந்தி இணைத்தார். கைராட்டினம், ராட்டை, காதி மற்றும் கைத்தறியால் நெய்யப்பட்டதுணி ஆகியவற்றை, ஒருதேசத்தின் பொருளாதார தன்னம்பிக்கை மற்றும் பொருளாதார சுயசார்பு சின்னமாக மாற்ற முடியும் என்ற சிந்தனை மற்றவர்களுக்கு வந்திருக்குமா என்பதே ஒரு சந்தேகம்தான். ஒருகைப்பிடி உப்பு மூலம், வெகுஜன போராட்டத்தை வேறு யாரால் உருவாக்கி இருக்க முடியும்? காலனித்துவ ஆட்சியின் போது, இந்திய உப்புகளுக்கு வரி விதிக்கும் உப்பு சட்டங்கள், இந்திய மக்களுக்கு பெரும் சுமையாக மாறியது. 1930 ம் ஆண்டு தண்டி யாத்திரை மூலம், உப்புச்சட்டங்களுக்கே காந்தி சவால் விடுத்தார். அரபு கடற்கரையில் இருந்து கொஞ்சம் உப்பை அவர் கையில் எடுத்த போது, வரலாற்று சிறப்பு மிக்க ஒத்துழையாமை இயக்கம் உருவாக வழிவகுத்தது.

 

உலகில் பல வெகுஜன போராட்டங்கள் நடந்துள்ளன. இந்தியாவிலும் கூட பல வகையிலான சுதந்திர போராட்டங்கள் நடந்துள்ளன. ஆனால், மக்கள் பங்கேற்பு என்ற தாரக மந்திரத்தின் மூலம், காந்திய போராட்டம் மற்ற போராட்டங்களில் இருந்து வேறுபடுகிறது. காந்தி, ஒருபோதும் நிர்வாக பதவியை வகித்தது இல்லை. மக்களால், தேர்வு செய்யப்படும் பதவிகளையும் வகித்ததுஇல்லை. அவர் ஒரு போதும் அதிகாரத்திற்கு ஆசைப்பட்டது கிடையாது.

வெளிப்புற ஆட்சி இல்லாதது மட்டும் சுதந்திரம் இல்லை காந்தி கருதினார். தனிநபரின் அதிகாரம் மற்றும் அரசியல் சுதந்திரத்திற்கு இடையே நெருங்கிய தொடர்பு உள்ளதை அவர் கண்டறிந்தார். ஒவ்வொரு குடிமகனுக்கும் மரியாதையும் கண்ணியமும் இருக்கும் வகையிலான ஒரு வார்த்தையை கண்டறிந்தார். உரிமைகள் குறித்து உலகம் பேசிய நிலையில், கடமைகள் குறித்து காந்தி வலியுறுத்தினார்.

இது தொடர்பாக ‘ இளம் இந்தியாவில்’ காந்தி எழுதியதாவது: ” மனிதர்களின் தனி உரிமைகளுக்கு ஆதரமாய் இருப்பது அவர்களின் கடமை. நாம் அனைவரும் நமக்கான கடமைகளை நிறைவேற்றினால், உரிமைகள் தேடுவது வெகு தொலைவில் இருக்காது” எனக்கூறியுள்ளார்.ஹரிஜன் இதழில் எழுதும் போது, ” தனது கடமைகளை முறையாக செய்கின்றவருக்கு உரிமைகள் தானாக கிடைக்கும்” என எழுதியுள்ளார்.

ஏழைகளின் சமூக பொருளாதார நலனை வலியுறுத்தும் கோட்பாட்டை நமக்கு காந்தி வழங்கியுள்ளார். இதனை பின்பற்றி, மனிதர்களின் பொறுப்பு பற்றி சிந்திக்க வேண்டும். பூமியின் வாரிசுகளாகிய நாம் தான் அதன் நல்வாழ்வுக்கு பொறுப்பாளிகள். தாவரங்கள், விலங்கினங்களின் நல்வாழ்வும் அதில் அடங்கும். காந்தி என்ற சித்தாந்தத்தால், நாம் தேடலுக்கான சிறந்த ஆசிரியர் இருக்கிறார். மனிதநேயத்தை நம்புபவர்களை ஒன்றிணைப்பது முதல் நிலையான வளர்ச்சியை மேம்படுத்துவது மற்றும் பொருளாதார சுய சார்பை உறுதிப்படுத்துவது வரை அனைத்து பிரச்னைகளுக்குமான தீர்வை காந்தி தருகிறார்.

இந்தியாவில் நாங்கள் எங்கள் தரப்பு முயற்சிகளை செய்து வருகிறோம். வறுமையை ஒழிப்பதில், மற்ற நாடுகளை விட இந்தியா முன்னிலையில் உள்ளது. எங்களது தூய்மைப்பணி முயற்சிகள், உலகளவில் கவனத்தை பெற்றுள்ளது. சர்வதேச சோலார் கூட்டணி போன்ற முயற்சிகள் மூலம், புதுப்பிக்கத்தக்க வளங்களை பயன்படுத்துவதில், இந்தியா முன்னிலை வகிக்கிறது. இது பல நாடுகளை ஒன்றிணைத்து, சூரிய சக்தி மூலம் ஒரு நிலையான எதிர்காலத்தை உருவாக்க வழிவகுக்கும்.உலகத்துக்காக, இந்த உலகத்தோடு, ஒன்றிணைந்து இன்னும் அதிகமாகநாங்கள் செய்ய விரும்புகிறோம்.

காந்திக்கு, அஞ்சலி செலுத்தும் இந்த தருணத்தில், பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் சவால் ஒன்றை நினைவு கூற விரும்புகிறேன். காந்தி குறித்து, ஐன்ஸ்டீன் கூறியதாவது: ” வரவிருக்கும் தலைமுறையினர், ரத்தம் மற்றும் சதையுடன் கூடிய அவரை போல், இந்த பூமியில் வாழ்ந்தார் என்பதை நம்ப மாட்டார்கள் ” எனக்கூறியுள்ளார். இது புகழ்பெற்றது ஆகும்.

காந்தியின் கொள்கைகளை, எதிர்கால சந்ததியினர் எவ்வாறு நினைவு கொள்வதை உறுதி செய்வது? காந்தியின் கொள்கைகளை, கண்டுபிடிப்புகள் மூலம் பரவ செய்ய வேண்டும் என சிந்தனையாளர்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன்.வெறுப்பு, வன்முறை ஆகியவற்றில் இருந்து உலககை விடுவிக்கவும் வளர்ச்சி பெறவும் அனைவரும் தோளுடன் தோள் இணைந்து உழைப்போம். அப்போதுதான் காந்தியின் கனவு நிறைவேறும். அவருக்கு பிடித்த வார்த்தையான ” வைஷ்ணவ ஜன.” என்பதற்கு, எவன் ஒருவன், மற்றவர்களின் கஷ்டங்களை புரிந்து கொண்டு, செருக்கோடு இல்லாமல், அந்த கஷ்டங்களை போக்க நினைக்கிறானோ அதுவே உண்மையான மனிதத்துவம் பொருளாகும். மகாத்மாவுக்கு உலகம் தலை வணங்குகிறது.

நன்றி பிரதமர் நரேந்திர மோடி 

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...

தரைப்பசலையின் மருத்துவக் குணம்

தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ...