தன்னம்பிக்கையை விவசாயிகளிடம் தான் கற்கமுடியும்

சிட்டி யூனியன் வங்கியின் 116-வது ஆண்டுவிழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதா ராமன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
வங்கி என்ற பெயரே மக்களை அச்சுறுத்த தொடங்கிவிட்டது. எங்கேயோ ஒருசிறிய கூட்டுறவு வங்கி செய்யும் மோசடியால் மக்களுக்கு வங்கிகள்மீது நம்பிக்கை குறைய தொடங்கியுள்ளது. ஏதோ ஓர்இடத்தில் யாரோ ஒருவர் செய்யும் தவறு மொத்தவங்கிகள் மீதும் சந்தேகம் ஏற்பட காரணமாக அமைந்து விடுகிறது.
நாட்டின் பொருளாதாரத்திலும், மக்களின் வாழ்வாதாரத்திலும் முக்கியபங்கு வகிக்கும் வங்கிகள் மீது மக்கள் நம்பிக்கை இழக்க தொடங்கினால் அது அவர்களுக்கும் நாட்டுக்கும் மிகவும்கெடுதலாக முடியும்.
ரிசர்வ் வங்கி மூலம் இங்குள்ள வங்கிகளை உலகத்தரத்திற்கு கொண்டுவரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.

மேலும் ப.கிருஷ்ணன் எழுதிய, முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமியின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்,புத்தகத்தை வெளியிட்டார். அதன் முதல் பிரதியை முன்னாள் நீதியரசர் சதாசிவம் பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில்பேசிய நிர்மலா சீதாராமன்; ஆசிரியர் தினத்தை கொண்டாடவில்லை என்றாலும்கூட, ஆசிரியர்கள் காட்டும் நல்வழிகளை பின் பற்றினால் வாழ்க்கை மேம்படும். அரசை குறைகூறாமல் விவசாயிகளை போல் தன்னம்பிக்கையுடனும், விடா முயற்சியுடனும் உழைக்கவேண்டும். என்ன பிரச்னை வந்தாலும் சோர்ந்து விடாமல் தொடர்ந்து முயற்சிப்பவர்கள் விவசாயிகள். விடா முயற்சி என்பதை விவசாயிகளிடம் இருந்துதான் கற்கவேண்டும்.

விவசாயிகள் எந்த விதத்திலும் தளர்ந்துபோக மாட்டார்கள். அதனால் தான் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டால், அதைவிட கொடுமையான விஷயம் இல்லை என நம் அனைவரின் மனதில் ஒரு வித உறுத்தல் ஏற்படுகிறது. தன்னம்பிக்கையை விவசாயிகளிடம் தான் கற்கமுடியும் என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...