வெளிநாட்டில் பணியாற்றும் இந்தியர்களுக்கு வருமானவரி கிடையாது

வெளிநாட்டில் பணியாற்றும் இந்தியர்களுக்கு வருமானவரி விதிப்பது தொடர்பாக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பிற்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். அதில் வெளிநாட்டில் சம்பாதிக்கும் பணத்திற்கு இங்கு வரிகிடையாது என்று கூறியுள்ளார். ஆனால் உள்நாட்டில் இருக்கும் சொத்துக்குவரி விதிக்கப்படும்.

இந்திய நாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் நேற்று முதல்நாள் தாக்கல் செய்யப் பட்டது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இரண்டாவது முறையாக இந்தபட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

தற்போதைய வழக்கப்படி, வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்கள் இந்தியாவில் வரிசெலுத்த தேவையில்லை. அதேபோல் அவர்கள் இந்தியாவில் இருக்கும் சொத்துக்களுக்கும் வரி செலுத்துவதில்லை. உதாரணமாக வெளிநாட்டில் வாங்கும் சம்பளத்திற்கு அவர்கள் இந்தியாவில் வரிசெலுத்த மாட்டார்கள். அதேபோல் அந்தவருவாய் மூலம் இந்தியாவில் தொழில்செய்தால், இந்தியாவிலும் அவர்கள் வரி செலுத்த மாட்டார்கள்.

இந்த நிலையில்தான் வெளிநாட்டில் பணியாற்றும் இந்தியர்களுக்கு வருமானவரி விதிப்பது தொடர்பாக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியானது. ஆனால் இந்த அறிவிப்பு நிறைய குழப்பத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பிற்கு நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். அதில் வெளிநாட்டில் சம்பாதிக்கும் பணத்திற்கு இங்கு வரிகிடையாது என்று கூறியுள்ளார். அவர்கள் எங்கே வேலை பார்க்கிறார்களோ அங்கே வரிகொடுத்தால் போதும். இங்கே அளிக்க வேண்டியது இல்லை.

மத்திய கிழக்கு நாடுகளில் சிலவற்றில் வருமானவரி கிடையாது. அப்படி வருமான வரி இல்லாதவர்களும் இந்தியாவில் வருமானவரி அளிக்க வேண்டியது இல்லை. ஆனால் உள்நாட்டில் இருக்கும் சொத்துக்குவரி விதிக்கப்படும். உதாரணமாக உள்நாட்டில் வீடு இருந்து, அதை வாடகைக்கு கொடுத்தால் வரி வசூலிக்கப் படும். உள்நாட்டில், வெளிநாட்டு பணத்தையே வைத்து தொழில்தொடங்கி, லாபம் பார்த்தால் அதற்கும் வரி வசூலிக்கப்படும்.

இதன் மூலம் வரி அதிகம் வசூலிக்கப்படும் என்று நிதி அமைச்சக கூறுகிறது. இந்த புதிய விதி முறை இந்த நிதி ஆண்டில் அமலுக்கு வரும் .

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...