முன்கள பணியாளர்கள் மூன்றுகோடி பேருக்கு முதற்கட்ட தடுப்பூசி

முன்கள பணியாளர்கள் மூன்றுகோடி பேருக்கு, முதற்கட்டத்தில் செலுத்தப்படும் தடுப்பூசிக்கு ஆகும்செலவை, மத்திய அரசே ஏற்கும்,” என, பிரதமர் நரேந்திரமோடி நேற்று தெரிவித்தார்.

கொரோனா வைரசுக்காக உருவாக்கப்பட்டுள்ள, ‘சீரம் இன்ஸ்டிட்யூட்’ நிறுவனத்தின், ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசிக்கும், ‘பாரத்பயோடெக்’ நிறுவனத்தின், ‘கோவாக்சின்’ தடுப்பூசிக்கும், அவசர காலத்தில் பயன்படுத்த, மத்தியஅரசு சமீபத்தில் அனுமதி வழங்கியது.இந்த தடுப்பூசிகளை, மக்களுக்கு செலுத்தும்பணிகள், வரும், 16ம் தேதி, நாடுமுழுதும் துவங்க உள்ளன.

இந்நிலையில், கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள சூழல்குறித்தும், தடுப்பூசி வினியோக நடைமுறை குறித்தும், அனைத்துமாநில மற்றும் யூனியன் பிரதேச முதல்வர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி, நேற்று, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

நம் நாட்டில், கொரோனா வைரசுக்கான இரண்டு தடுப்பூசிகளுக்கு, இது வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், நான்கு தடுப்பூசிமருந்துகள், இறுதிகட்ட பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.தேவைக்கேற்ப உருவாக்கப்பட்டுள்ள, கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள், உலகில் உருவாக்கபட்டுள்ள இதர தடுப்பூசிகளைக் காட்டிலும், விலை குறைவானவை.அதிக செயல்திறன் உடைய தடுப்பூசிகள், நாட்டுமக்களுக்கு கிடைக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், நம் ஆராய்ச்சியாளர்களும், மருத்துவ நிபுணர்களும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இவற்றை தயாரித்துள்ளனர்.மக்களுக்கு தடுப்பூசிசெலுத்தும், உலகின் மிகப்பெரிய திட்டம், நம் நாட்டில், வரும், 16ம் தேதி துவங்க உள்ளது.

கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் முன்னின்று சேவையாற்றி வரும், முன்கள பணியாளர்கள் மூன்று கோடிபேருக்கு, முதற்கட்டத்தில், தடுப்பூசி செலுத்தப்படும். இந்த மூன்று கோடி பேருக்கும், தடுப்பூசிக்கு ஆகும்செலவை, மாநில அரசு ஏற்கத் தேவையில்லை. அந்த செலவை, மத்திய அரசே ஏற்கும். சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களை தவிர, வேறுயாரும், இந்த தடுப்பூசியை முதற்கட்டத்தில் எடுத்துக்கொள்ள கூடாது. மக்கள் பிரதிநிதிகளான அரசியல்வாதிகள், தங்கள் வாய்ப்பு வரும்வரை காத்திருக்க வேண்டும். முதற்கட்டத்தில் முந்தவேண்டாம்.உலகில் உள்ள, 50க்கும் மேற்பட்ட நாடுகளில், 2.5 கோடி பேருக்கு மட்டுமே, இதுவரை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நம்நாட்டில், அடுத்த சில மாதங்களில், 30 கோடி பேருக்கு, தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுவிடும்.இவ்வாறு, அவர் கூறினார்.

 

மஹாராஷ்டிராவின் புனேவை சேர்ந்த, ‘சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா’ நிறுவனத்திடம் இருந்து, கொரோனா வைரசுக்கான, ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசிமருந்துகளை கொள்முதல் செய்வதற்கு, மத்திய அரசு, நேற்று, ‘ஆர்டர்’ செய்தது. அதன்படி, 1.1 கோடி தடுப்பூசி மருந்தின், ‘டோஸ்’களை வாங்க, ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி மருந்தின் ஒருடோஸ் விலை, 200 ரூபாயாக நிர்ணயித்துள்ள சீரம்நிறுவனம், ஜிஎஸ்டி., வரியாக 10 ரூபாயை சேர்த்து, 210 ரூபாய்க்கு, விற்க உள்ளது.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில்,’ ஸ்டார்ட் அப் இந்தியா’ திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி கடந்த, 2016ல் துவக்கிவைத்தார். இந்ததிட்டத்தின் சர்வதேச மாநாடு, வரும், 15, 16ம் தேதிகளில், ‘வீடியோ கான்பரஸ்’ வழியாக நடக்கஉள்ளது.

இந்தமாநாடு பற்றி, ‘டுவிட்டரில்’ பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:இந்த மாநாட்டில், சுயதொழில்துவக்க ஆர்வமுள்ள இளைஞர்கள் அதிகளவில் பங்கேற்கவேண்டும். நம், ‘ஸ்டார்ட் அப்’ ‘ஹீரோ’க்கள், பெரும் நகரங்களிலிருந்து மட்டுமல்லாமல், சிறிய நகரங்களில் இருந்தும் உருவாகியுள்ளனர் என்பதில் பெருமிதப் படுகிறேன்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...

அருகன்புல்லின் மருத்துவ குணம்

அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ...