நாட்டையும் அதன் ஒருமைப்பாட்டையும் மதிப்பகதா ஒவ்வொருவரும் உறுதியேற்க வேண்டும்

நாட்டையும் அதன் ஒருமைப்பாட்டையும் மதிப்பதாக ஒவ்வொருவரும் உறுதியேற்கவேண்டும் என பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக காந்தியடிகள் 1922ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்த போது, உத்தரப்பிரதேசத்தின் சவுரி சவுராவில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் காவல்நிலையத்தை தீவைத்துகொளுத்தினர். இதில் விவசாயிகள் மூவரும், காவல் துறையினர் 23 பேரும் உயிரிழந்தனர்.

இந்நிகழ்வின் நூற்றாண்டையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி காணொலியில் பங்கேற்று உரையாற்றினார். வேளாண்மையை லாபமுள்ள தொழிலாகவும், விவசாயிகளைத் தன்னிறைவு பெற்றவர்களாகவும் மாற்ற அரசு பாடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டார். நாட்டின் அடிப்படையாக திகழ்பவர்கள் விவசாயிகள் என்றும், சவுரிசவுரா நிகழ்வில் விவசாயிகளின் பங்கு மிகப் பெரியது என்றும்  தெரிவித்தார்.

கொரோனா சூழலிலும் விவசாயிகள் அதிகளவு தானிய விளைச்சல் கண்டு சாதனை படைத்ததை நினைவுகூர்ந்தார். பட்ஜெட்டில் எளியமனிதரை பாதிக்காத வகையில் வரி உயர்த்தப்பட வில்லை என்றும், நலவாழ்வு, உட்கட்டமைப்பு, விவசாயிகள் நலன் ஆகியவற்றுக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...