மேகதாது அணைவிவகாரத்தில் தமிழகமக்களின் விருப்பத்துக்கு மாறாக நரேந்திரமோடி அரசு செயல்படாது என நம்புவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் அவர் கூறுகையில், “இந்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரை முருகன் தலைமையிலான அனைத்துக் கட்சிகுழு சந்தித்தது. தமிழக தரப்பு தெரிவித்த கருத்துக்களை மத்திய அமைச்சர் கேட்டுக் கொண்டார். தமிழ்நாட்டு அரசின் ஒப்புதலின்றி மேகதாது அணை கட்டப்பட மாட்டாது என்று மத்திய அமைச்சர் உறுதி அளித்திருக்கிறார். எனவே, தமிழக மக்களின் விருப்பத்துக்குமாறாக பிரதமர் நரேந்திரமோடி அரசு செயல்படாது என்று நம்புகிறோம் என்றார்.
உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ... |
அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ... |
வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ... |