வலுவான, வளமான இந்தியாவால்தான் அண்டை நாடுகளுக்கு உதவமுடியும்

 வலுவான, வளமான இந்தியாவால்தான் அண்டை நாடுகளுக்கு உதவமுடியும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் பூடான் சென்றார். பிரதமர் பதவியேற்ற பிறகு அவரது முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.

முதல்நாளில் தலைநகர் திம்புவில் மன்னர் ஜிக்மே வாங்சுக் மற்றும் பிரதமர் ஷெரிங் தோப்கய் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், இந்திய உதவியுடன் கட்டப்பட்ட பூடான் நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு கட்டிடத்தையும் அவர் திறந்துவைத்தார்.

சுற்றுப்பயணத்தின் 2ம் நாளான நேற்று நரேந்திரமோடி பூடான் நாட்டின் பாராளுமன்றத்தின் கூட்டு கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

இந்தியா எப்போதுமே அண்டை நாடுகளுடன் நட்புறவு வைத்துக் கொள்வதையே விரும்புகிறது. இந்தியா வளமான நாடாக இருந்தால்தான் இந்த பிராந்தியம், குறிப்பாக தெற்காசியகூட்டமைப்பு நாடுகள் முன்னேற முடியும். மேலும், இந்தியா வளமாகவும், வலிமையாகவும் திகழ்ந்தால்மட்டுமே அருகில் உள்ள சிறிய பக்கத்து நாடுகளின் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும்.

அண்டை நாடுகளின் வளர்ச்சியில் இந்தியாவுக்கும் பொறுப்புள்ளது என்பதை இந்தியா உணர்ந்து இருக்கிறது. அதனால் தான் எனது பதவி ஏற்பு விழாவின்போது தெற்காசிய நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் ஆட்சிமாற்றத்தால் இந்தியா–பூடான் இடையே நிலவும் வலிமையான நட்புறவில் எந்தவித மாற்றமும் ஏற்படாது. அதுதொடரும்.

பூடானும், இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களும் கூட்டாக விளையாட்டு நிகழ்ச்சிகளை நடத்துவது தொடர்பான புதியபரிந்துரைகள் மற்றும் இமயமலையில் ஒருங்கிணைந்த பல்கலைக் கழகத்தை ஆராய்ச்சிக்காக நிறுவுவது ஆகியவற்றின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவு மேலும்விரிவடையும்.

ஒருநாட்டை தீவிரவாதம் பிளவுபடுத்துகிறது. அதேநேரம் சுற்றுலா ஒற்றுமை படுத்துகிறது. பூடானில் சுற்றுலா வளர்ச்சிக்கு நல்லவளம் உள்ளது. இதன் மேம்பாட்டுக்கு அதிக முதலீடும் தேவையில்லை. எனினும் இதன் மூலம் நல்ல லாபத்தை பெறமுடியும். ஏழைகள்கூட இதனால் பயன் பெறுவார்கள் என்று மோடி பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...

காரட்டின் மருத்துவ குணம்

காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ...

நந்தியாவட்டையின் மருத்துவ குணம்

ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ...