தமிழக நிதியமைச்சர் தியாகராஜனுக்கு பதிலடிகொடுத்தது தவறில்லை எனக்கூறியுள்ள தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, அடித்தால் திருப்பிஅடிப்பேன். மரியாதை கொடுத்தால், இரட்டிப்பாக அதனைசெய்வேன் எனக்கூறினார்.
நெல்லையில் நிருபர்களை சந்தித்தவர் கூறியதாவது: அண்ணாதுரை முதல்வராக பதவியேற்ற பிறகுதான், விநாயகர் சதுர்த்திக்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டது. அண்ணாதுரை வகுத்தபாதையில் இருந்து திமுக அரசு எந்தளவு விலகி உள்ளது என்பதற்கு முதல்வர் வாழ்த்துசொல்லாதது, ஹிந்து சமய அறநிலையத் துறை அவர்கள் சார்ந்த துறை வாழ்த்து சொல்லியதற்கு கேள்வி எழுப்பியது உதாரணம். விநாயகர் சதுர்த்திக்கு ஹிந்துசமய அறநிலையத்துறை வாழ்த்து சொல்லியது தவறுகிடையாது. ஒரேதவறு. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து சொல்லாததுதான். முதல்வரின் செயல், அனைத்து மதத்தையும் சமமாக நடத்துவேன் என்பதற்கு எதிராகஉள்ளது. முதல்வர் வாழ்த்து சொல்லாததன் மூலம், அவர் மத அரசியல் செய்கிறார் என்பது மீண்டும் ஒருமுறை ஊர்ஜிதமாகி உள்ளது.
தமிழகத்தை விட உ.பி.,யின் நிகரவருமானம் உயர்ந்துள்ளது. உத்தர பிரதேசம் சரியில்லை எனக்கூறி ஆட்சி செய்கிறீர்கள். ஆனால், தமிழகத்தைவிட உ.பி.,யின் நிகர வருமானம் உயர்ந்துள்ளது. தமிழகத்தின் நிகர வருமானம் குறைந்துள்ளதற்கும் தமிழக நிதியமைச்சர் தியாகராஜன் பதில் சொல்லவேண்டும்.
தமிழகத்தின் அரசியலுக்கு அண்ணாமலை சாபக்கேடு என தியாகராஜன் சொல்வதற்கு என்ன உரிமைஉள்ளது. நீங்கள்தான் சாபக்கேடு. சுதந்திரத்திற்கு முன்னர் கிழக்கிந்திய கம்பெனியோடு கொஞ்சி குழாவவில்லையா?. ஜஸ்டீஸ் கட்சிக்கு தொடர்பில்லையா?. 1941ல் நீங்கள் இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கவேண்டாம். வழங்கினால் இங்கிலாந்தில் இருந்து ஆட்சி செய்யுங்கள் எனக்கூறினார்கள். அந்தகட்சியின் வழித்தோன்றலாக வந்து அமர்ந்துவிட்டு என்னைபார்த்து அந்த வார்த்தை பயன்படுத்த என்ன அருகதை உள்ளது. தி.மு.க.,வில் யாருக்கும் அந்தஅருகதை கிடையாது. உங்களுக்கும், கிழக்கிந்திய கம்பெனிக்கும் உள்ள தொடர்பு தமிழக மக்களுக்குதெரியும். வெட்கம், மானம் சூடு இல்லாமல் பழைய சரித்திரத்தை மறைத்துவிட்டு இந்தியாவிற்கு போராடியதாக 2022ல் காட்டுவதற்கு பதிலடிகொடுக்க வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது.
திமுக பழையபாணி அரசியலில் இருந்து வெளியே வரவேண்டும். என்னை மிரட்டி பார்த்தால், இப்படி தான் பதில் இருக்கும். மிரட்டி பார்க்க நாங்கள் வரவில்லை. நான் விவசாயதோட்டத்தில் சென்று விவசாயம் செய்து பிழைத்து கொள்வேன். உங்களால் முடியுமா?
தகாத வார்த்தை பேசுவீர்கள். ஆபாசம் காட்டுவீர்கள். ஐ.டி., விங் வைத்து பேசுவீர்கள் நான் இயேசுநாதர் கிடையாது. ஒருகன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தை காட்ட நான் இயேசு கிடையாது. அடித்தால் திருப் அடிப்பேன். அத்துமீறினால், அதனை இரு மடங்காக செய்வேன். இதனால், எதை இழந்தாலும் கவலைகிடையாது. மரியாதை செய்தால் இரட்டிப்பாக மரியாதை செய்தேன். தியாகராஜனுக்கு பதிலடிகொடுத்தது எந்த தவறும் கிடையாது. நான் தன்மானம் இருக்கும் அரசியல்வாதி.
எதையும் விற்று பிழைத்து, யாரின் கால்பிடித்து பதவிக்கு வரவில்லை. பதவியில் உட்கார ஆசையில்லை. அண்டிபிழைத்து, ஒருவரை ஒட்டிபிழைத்து இருக்கும் அவசியம் அண்ணாமலைக்கு கிடையாது. பா.ஜ., உறுப்பினராக இருப்பதேபெருமை. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ... |
ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ... |
அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது. |