மராட்டிய மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில் விஜயதசமி கொண்டாடப்பட்டது. அதில் மோகன் பகவத் பேசியதாவது:–
நாட்டில் சிறு சிறு சம்பவங்கள் நடந்து வருகின்றன. அவற்றை மிகைப்படுத்தி, பெரியளவில் காட்டுகிறார்கள். இந்த சிறு சம்பவங்களால், இந்திய கலாசாரத்தையோ, இந்து கலாசாரத்தையோ சிதைக்க முடியாது.
காலங்காலமாக இந்துக் கலாச்சாரம், இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒருங்கிணைத்து, ஒருமைப்பாட்டை நிலைநிறுத்தி வருகிறது. இதுவே இந்துத்துவாவின் சாராம்சமும் கூட.
நமது தேசம் இப்போதுபோல் எப்போதுமே ஒன்றுபட்டு இருக்கும். இந்துத்துவா கொள்கையின் அடிப்படையில் நாட்டின் ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்தும் பணியை சங் பரிவார் அமைப்பு கடந்த 90 ஆண்டுகளாக சிறப்பாக செய்து வருகிறது.
இந்திய சமூகத்தை ஒருங்கிணைப்பதில் ஆர்.எஸ்.எஸ். மூன்று அடிப்படை நம்பிக்கைகளை பின்பற்றியிருக்கிறது. அவை இந்து கலாச்சாரம், இந்து சமய மூதாதையர்கள், இந்து நிலம். சமூகத்தை ஒருங்கிணைக்கும் இந்த நம்பிக்கைகள் நிலைநாட்டப்பட வேண்டும். அதுவே ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இலக்கு. நமது நாடு ஒன்றாக இருந்தது. இனியும், ஒன்றாகவே இருக்கும்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஏமாற்றமான மன நிலையில் நாடு இருந்தது. ஆனால், தற்போதைய மத்திய அரசின் துரிதமான நடவடிக்கைகளால், நம்பிக்கையான சூழ்நிலை பிறந்துள்ளது. நாட்டின் மதிப்பு உலக அரங்கில் உயர்ந்துள்ளது. இனி நமக்கு கவலைஇல்லை.
தூய்மை இந்தியா, முத்ரா வங்கி, ஜன் தன் யோஜனா, கியாஸ் மானியம் விட்டுக்கொடுத்தல் போன்ற திட்டங்கள் நல்ல அறிகுறியாக உள்ளன. இருப்பினும், பொருளாதாரத்தை அதலபாதாளத்தில் இருந்து மீட்டெடுப்பதற்கு சிறிதுகாலம் பிடிக்கும்.
நேபாள இயற்கை பேரிடரின்போது மீட்புப் பணியில் உதவியது, மாலத்தீவில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டபோது நிலைமையை சமாளிக்க உதவிக்கரம் நீட்டியது, ஏமனில் சிக்கிய இந்தியர்களை பத்திரமாக தாயகம் திருப்பி அழைத்து வந்தவது என இந்திய அரசின் பணிகள் பல பாரட்டுக்குரிய விதத்தில் அமைந்துள்ளன.
இந்திய பாரம்பரிய அடையாளங்களான யோகா, கீதை, தத்தாகட் ஆகியன இன்று உலகளவில் பிரபலமடைந்துள்ளன. இது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.
அதேவேளையில், நாட்டின் அனைத்து மக்களையும் சமமாக நடத்தும் வகையிலான மக்கள்தொகை கொள்கையை உருவாக்குவது அவசியம். மக்கள்தொகையை கட்டுப்படுத்த நாட்டில் எந்த ஆலோசனையும் நடக்கவில்லை. எல்லோருக்கும் பொருந்தக் கூடிய ஒரே மாதிரியான மக்கள்தொகை கொள்கையை அமல்படுத்த வேண்டும்.
மக்கள்தொகை கூடும் போது, நாட்டின் சுமையும் கூடுகிறது. மக்கள்தொகை வளர்ச்சி, ஒரு சொத்தாகவும் இருக்கலாம். ஆனால், சாப்பிடுவதற்கு நிறைய வாய்கள் இருக்கும் போது, வேலை செய்வதற்கும் நிறைய கைகள் தேவைப்படும். அதற்கு இன்னும் 50 ஆண்டுகளுக்கு திட்டமிட வேண்டும். பிறகு எப்படி மக்களுக்கு கல்வியையும், சுகாதாரத் தையும் வழங்கப் போகிறோம்?
மக்கள் தொகையை வெறும் சட்டங்களால் கட்டுப்படுத்திவிட முடியாது. மக்களின் மனப்பான்மையை மாற்ற பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
விரோத மனப்பான்மை கொண்ட பாகிஸ்தானாலும், எல்லையை விரிவுபடுத்தும் சீனாவாலும் நமது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஐ.எஸ். போன்ற தீவிரவாத அமைப்புகளும் வளர்ந்துவருகின்றன. நம் நாட்டு இளைஞர்கள் சிலரே ஐ.எஸ். இயக்கத்தால் தவறாக வழிநடத்தப் படுகின்றனர்.
சாமானிய மக்களுக்கும் கல்விகிடைக்கும் வகையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். கல்வியை வியாபாரமாக்கும் போக்கு தடுக்கப்பட வேண்டும். தனி மனிதனின் வயிற்று பசியை போக்குவதற்கு மட்டுமல்ல கல்வி. சமூகத்தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் கல்வி கற்பிக்கப்படவேண்டும். கல்வி, நன்மதிப்புகளையும், சமூக சிந்தனையையும் ஊக்குவிப்பதாக அமைய வேண்டும்.
வளர்ச்சி திட்டங்களை அமல் படுத்தினால் மட்டும் போதாது. அத்திட்டங்கள் சரியாக செயல்படுத்தப் படுகின்றனவா என்பதும் கண்காணிப்பட வேண்டும். இதற்கு அரசு, அரசு நிர்வாகம், சமூகமும் ஒன்றுபட்டு இயங்கவேண்டும். அரசு கொள்கைகளை வகுத்து தந்தால் அதை நாம் அனைவரும் இணைந்து செயல் படுத்திட வேண்டும்.
கல்வித்துறை, நிர்வாகத் துறை போல் தேர்தல் முறைகளிலும் சீர்திருத்தங்கள் தேவைப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் ஊழலுக்கு அப்பாற்பட்டவர்களாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் சமூகத்திற்கு உண்மையானவர்களாக இருக்க வேண்டும்.
வரி விதிப்பு முறைகளை எளிமைப்படுத்த வேண்டும். மக்களின் பொதுசுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும்.
தேசம் தானாகவே முன்னேற முடியாது. அதற்கு மக்களின் பங்களிப்பு தேவை. தேச முன்னேற்றத்தை கட்டமைப்பதில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் ஆர்வத்துடன் ஈடுபட வேண்டும். மற்றவர்களும் இப்பணியில் இணைந்து கொள்ள வேண்டும்.
இந்தியக் கலாச்சாரம் அனைவரையும் சமமாக ஏற்றுக் கொள்ளும் கலாச்சாரம். வேற்றுமையில் ஒற்றுமையைப் பேணும் கலாச்சாரம். இந்தியக் கலாச்சாரமே இந்துக் கலாச்சாரமும் ஆகும்" என்றார் மோகன் பாகவத்.
முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ... |
சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ... |
ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.