அன்று வாக்குகளுக்காக பசுவை 'சின்னமாக்கிய' காங்கிரஸ், இன்று அதே வாக்குகளுக்காக பசுவை 'சின்னா பின்னமாக்குவது' காங்கிரஸ் கட்சியின் பதவி வெறியை காட்டுகிறது. பசு வதை தடை சட்டத்தை எதிர்க்கிறது எதிர் கட்சிகள்.
குறிப்பாக காங்கிரஸ் அதை எதிர்த்து, இரு மதங்களுக்கிடையே, பல்வேறு சமூகங்களுக்கிடையே அரசியல் செய்ய முயற்சிப்பது அந்த கட்சியின் மோசமான, கேவலமான நிலைப்பாட்டையே குறிக்கிறது. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, ஜவஹர் லால் நேரு அவர்களின் தலைமையில் இயங்கிய காங்கிரஸ் கட்சி 'இணை காளைகள்' தங்களின் கட்சியின் சின்னமாக கொண்டிருந்து, விவசாயிகளின் காவலனாக முன்னிறுத்தி வாக்குகளை கேட்டது. 1969 ம் ஆண்டு உட்கட்சி பூசல் காரணமாக காங்கிரஸ் பிளவு பட்டபிறகு,
அதாவது காமராஜர் தலைமையில் CONGRESS (O) ஒரு கட்சியாகவும், இந்திரா காந்தி தலைமையில் காங்கிரஸ் (R) என்று ஒரு கட்சியாகவும் பிளவுபட்ட பின், ஏற்கனவே இருந்த 'இணை காளைகள்' சின்னம் முடக்கப்பட்டது. சின்னம் பறிபோனதால் பதறிப்போன இந்திரா காந்தி அவர்கள் செய்வதறியாது திகைத்தார்.
எப்படியாவது மக்களின் நம்பிக்கை பெற்ற சின்னத்தை பெற வேண்டுமென்ற எண்ணத்தில் திட்டமிட்டு 'பசுவும் கன்றும்' சின்னத்தை தேர்ந்தெடுத்தார். அப்படி மக்களின் வாக்கை கவர்வதற்காக,மக்களின் நம்பிக்கையை பெறுவதற்காக புனிதமான பசுவை தங்களின் சின்னமாக்கி கொண்ட காங்கிரஸ், இப்போது, பசுவதை தடை சட்டத்தை எதிர்ப்பதோடு, மாட்டிறைச்சி குறித்து பல தவறான தகவல்களை மக்கள் மத்தியில் குழப்பத்தை உருவாக்கி வருகிறது.
இது மட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியின் இன்றைய தலைவர்களும், பேச்சாளர்களும் பசு குறித்து பேசும் பேச்சுக்கள் ஹிந்துக்களின் நம்பிக்கைகளை புன்படுத்துவதோடு, சிறுபான்மை சமுதாயத்தினரை ஹிந்துக்களுக்கு எதிராக தூண்டி விடும் முயற்சியில் இறங்கியிருப்பது இந்த நாட்டிற்கு காங்கிரஸ் செய்யும் மிக பெரிய துரோகம்.
அன்று வாக்குகளுக்காக பசுவை 'சின்னமாக்கிய' காங்கிரஸ், இன்று அதே வாக்குகளுக்காக பசுவை 'சின்னாபின்னமாக்குவது' காங்கிரஸ் கட்சியின் பதவி வெறியை காட்டுகிறது.
கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ... |
பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.