ஜம்மு-காஷ்மீர் மாநில ஒட்டு மொத்த வளர்ச்சிக்கும் ரூ.80,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யபடும்.இந்த நிதியுதவி மூலம் 2014 வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்கள், விவசாயிகள், தொழிலதிபர்கள் பலனடைவர். சுற்றுலாத்துறை வளர்ச்சி காணும், மாநிலத்தின் உட்கட்டுமானம் மேம்படுத்தப்படும். இது முடிவல்ல ஒருதொடக்கமே.
ஜம்மு-காஷ்மீர் தேசிய நெடுஞ் சாலையை சீரமைக்க ரூ.34,000 கோடி ஒதுக்கப்படும். இதனால் பயணநேரம் 12 மணிநேரத்தில் இருந்து 3.5 மணி நேரமாக குறையும். இந்த நிதியுதவியை காஷ்மீருக்கு அளிப்பதில் எந்த தடையும் இல்லை.
தில்லி வழங்கும் நிதி மட்டுமல்ல, தில்லியின் இதயமும் காஷ்மீர் மக்களுக்காக இருக்கிறது . காஷ்மீர் நகரத்தை சுற்றுலாவின் கனவுநகரமாக்க விரும்புகிறேன்.
கடந்த காலங்களில் காஷ்மீர் வெகுஅதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. நகரத்துக்காக ரத்தம் சிந்தியோரை நினைத்து வேதனைபடுகிறேன். கொஞ்சம் பணம் இருந்தால் காஷ்மீர் செல்லலாம் என்கிற மக்களின் பழைய எண்ணங்கள் நிறைவேற அரசுபாடுபடும்.
காஷ்மீர் இல்லாமல் இந்தியா முழுமைபெறாது. சுஃபி (Sufism) பிறந்த இடம் இது. அது எல்லோரையும் ஒருங்கிணைக்கிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஷர்-இ-காஷ்மீர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மோடி பேசியது
கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ... |
பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ... |
இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.