கேரளாவில் நடைபெற்ற, உள்ளாட்சி தேர்தலில், காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளது. குறிப்பிடத் தக்க இடங்களில் பாஜக வெற்றி பெற்று தனது கணக்கை தொடங்கியுள்ளது.
கேரள உள்ளாட்சி அமைப்புகளுக்கு, இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மொத்தம் உள்ள, ஆறு மாநகராட்சிகளில், நான்கு மாநகராட்சிகளை, எதிர்க் கட்சியான, எல்.டி.எப்., கைப்பற்றியது; காங்கிரஸ் தலைமையிலான, ஆளும், யு.டி.எப்., கூட்டணி, இரண்டு மாநகராட்சிகளில் மட்டுமே வெற்றிபெற்றது.
இதேபோல், நகராட்சி மற்றும், கிராம பஞ்சாயத்துகளிலும், எல்.டி.எப்., குறிப்பிடத்தக்க இடங்களை கைப்பற்றியுள்ளது.பா.ஜ., கூட்டணி, ஒருநகராட்சி, 14 பஞ்சாயத்துகளை கைப்பற்றி, சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ளது.
திருவனந்தபுரம், எர்ணாகுளம், பாலக்காடு ஆகிய இடங்களில், யு.டி.எப்.,- எல்.டி.எப்., ஆகியவற்றுக்கு, கடும்போட்டியை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம் மாந கராட்சியில், 100 வார்டுகளில், 34ஐ, பா.ஜ., கைப்பற்றி, காங்கிரஸ் கூட்டணியை மூன்றாவது இடத்திற்கு தள்ளிவிட்டது. இங்கு, இடதுசாரிகளுக்கு, 42 வார்டுகளும், காங்கிரஸ் கூட்டணிக்கு, 21 வார்டுகளும் கிடைத்துள்ளன. கடந்ததேர்தலில், பா.ஜ.,வுக்கு ஆறு வார்டுகள் மட்டுமே கிடைத்தன.
மலப்புரம், ஆழப்புழாவில் பா.ஜ., முதன் முறையாக, இரண்டுவார்டுகளை வென்றுள்ளது. 86 நகராட்சிகளில் யு.டி.எப்., 40; எல்.டி.எப்., 45 இடங்களையும், பா.ஜ., ஒருஇடத்தையும் கைப்பற்றியுள்ளது.உள்ளாட்சித் தேர்தல் வெற்றி, பா.ஜ.,வுக்கு புதிய உற்சாகத்தை அளித்துள்ளது.
டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ... |
கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ... |
ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.