மதுரை, கோவை உள்ளிட்ட மாநகராட்சிகளில், கள்ளஓட்டுக்கள் பதிவானதால், மறுதேர்தல் நடத்தக்கோரி, வழக்குதொடர தமிழக பா.ஜ., மேலிடம் முடிவு செய்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சிதேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இந்த தேர்தல், மாநில தேர்தல் கமிஷனின் நம்பகத்தன்மைக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றஞ் சாட்டியுள்ளார்.பா.ஜ., ஓட்டுவங்கி கணிசமாக உள்ள வடசென்னையில், வடமாநிலத்தினர் வசிக்கிற சில பகுதிகளில், அவர்களின் ஓட்டுக்கள் கொத்து, கொத்தாக நீக்கப்பட்டுள்ளன. கடந்த லோக்சபா, சட்ட சபை தேர்தலில் ஓட்டு அளித்த குடும்பத்தினர், உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியலில் விடுபட்டது ஆளுங்கட்சியினர் மீது சந்தேகத்தை உருவாக்கி உள்ளது.
விடுபட்ட வாக்காளர்களின் குமுறலை, வீடியோ வாயிலாக பா.ஜ.,வினர் பதிவு செய்துள்ளனர். மதுரை மாநகராட்சி தேர்தலில், 30, 32, 43, 57, 58, 98 ஆகிய ஆறுவார்டுகளில், ஆளுங்கட்சியினரின் அத்துமீறல் நடவடிக்கை மாவட்ட அளவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. கேமரா பொருத்தாததால், வாக்காளர்களை தடுத்துநிறுத்தி விட்டு, ஆளுங்கட்சியினரே கள்ள ஓட்டு போட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்த புகாரை மாவட்ட கலெக்டரிடம் வழங்கிய, மதுரை மாநகர் மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் கூறுகையில், ”சுதந்திரமாக, நியாயமாக தேர்தல் நடத்த வேண்டும். வாக்காளர்கள் தங்கள் ஓட்டுக்களை பதிவு செய்வதை உறுதி செய்ய வேண்டும்.”ஆறு வார்டுகளுக்கு மறு தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம்,” என்றார்.
கோவை மாநகராட்சியின் சில வார்டுகளில், வாக்காளர்களை ஓட்டு போடவிடாமல், ஆளுங்கட்சியினரை மட்டும் அனுமதித்து, கள்ள ஓட்டுக்களை பதிவுய்த வீடியோ ஆதாரமும்; ஓட்டுச்சாவடி வாசலில் பணம் வழங்கிய வீடியோ ஆதாரமும் பா.ஜ.,வினரிடம் சிக்கியுள்ளது. ஆளுங்கட்சியினரின் தில்லுமுல்லுகளுக்கு, தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் நிராகரித்தால், மறுதேர்தல் நடத்தும் கோரிக்கையுடன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க பா.ஜ., முடிவு செய்துள்ளது.
ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ... |
வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ... |
குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ... |