பாரீஸ் தீவிரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து பிரான்ஸ் முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இசைக் கச்சேரி அரங்கு, கால்பந்து மைதானம், ஓட்டல்கள் என 6 இடங்களில் தீவிரவாதிகள் நேற்று முன்தினம் இரவு திடீர் தாக்குதல் நடத்தினர். இந்தச் சம்பவத்தை அடுத்து பிரான்ஸ் மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளில் பதற்றமான சூழ்நிலை எழுந்துள்ளன. ஐரோப்பா முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.
பிரான்ஸ் நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யபட்டுள்ளது. தலை நகர் பாரீஸில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் குவிக்கபட்டுள்ளனர். ஈபிள் டவர் உள்ளிட்ட முக்கியபகுதிகள் உயர் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
அனைத்து பாதுகாப்புப்படை யினரும் ஒருங்கிணைக்கபட்டு ஒரே கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகின்றனர். பிரான்ஸின் சர்வதேச எல்லைகள் மூடப்பட்டு தீவிரசோதனைகள் நடத்தப்படுகின்றன. பாதுகாப்பு படையினருக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டு யாரையும் எங்கும் சோதனை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே உயிரிழந்த வர்களுக்கு அஞ்சலிசெலுத்தும் வகையில் 3 நாட்கள் துக்கம் கொண்டாட அதிபர் ஹோலாந்தே அழைப்பு விடுத்துள்ளார்.
பாரீஸ் தாக்குதலில் இந்தியர்கள் யாரும் பலியானதாக இதுவரை தகவல்கள் இல்லை. இருந்தாலும் அங்குள்ள இந்திய தூதரகம் ஹெல்ப்லைன் எண்ணை அறிவித்துள்ளது. பாரீஸில் உள்ள இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். யாருக்கும் எந்தபிரச்சினையும் இல்லை. தீவிரவாத தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இந்தியாசார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன் என பிரான்ஸ் நாட்டுக்கான இந்தியத் தூதர் மோகன் குமார் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர். அதோடு, மேலும் விவரம் அறிய 0140507070 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.
மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நடந்த தீவிரவாத தாக்குதல்பாணியில் பாரீஸில் தாக்குதல் நடந்துள்ளது. மும்பையில் தீவிரவாதிகள் பலகுழுக்களாக பிரிந்து துப்பாக்கியால் சுட்டும் கையெறி குண்டுகளை வீசியும் ஒரேநேரத்தில் பலரை கொன்றனர்.
பாரீஸிலும் அதே பாணியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஒரேநேரத்தில் விளையாட்டு மைதானம், ஓட்டல்கள், இசை அரங்குகள் என 6 இடங்களில் தாக்குதல் நடத்தியுள்ளனர். மும்பையை போலவே பல இடங்களில் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. அதேபோல் கண்ணில் பட்டவர்களை எல்லாம் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுத்தள்ளியுள்ளனர்.
அல் காய்தா அமைப்பின் தலைவனாக இருந்த ஒசாமா பின்லேடன், மும்பை தாக்குதல் பாணியில் ஐரோப்பிய நாடு களில் தீவிரவாத தாக்குதலை நடத்தவேண்டும் என தனது அமைப்பினருக்கு உத்தரவிட் டிருந்தான். இப்போது நடந்திருப் பதை பார்க்கும்போது, அதுதான் நினைவுக்கு வருகிறது என பிரான்ஸ் நாட்டு விமானப்படையின் முன்னாள் ஜெனரல் மைக்கேல் ஹைடன் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் சிஐஏ உளவுத்துறை முன்னாள் அதிகாரி ஜேக்ரைஸ் கூறியதாவது: 2001-ம் ஆண்டில் அமெரிக்காவின் நியூயார்க் இரட்டை கோபுரத்தை அல்-காய்தா தீவிரவாதிகள் தகர்த்தனர். அப்போதே பிரான்ஸ் விழிப்படைந்திருக்க வேண்டும்.
அண்மையில் சார்லி ஹேப்டோ பத்திரிகை அலுவலகத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதன் பிறகாவது பிரான்ஸ் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத் தியிருக்க வேண்டும். அதை செய்ய தவறியதால் இப்போது பேரிழப்பு ஏற்பட்டுள்ளது.
தீவிரவாதிகள், அகதிகள் போர்வையில் பாரீஸுக் குள் ஊடுருவியது தெரியவந் துள்ளது.
பாரீஸில் உள்ள பத்தக்லேன் இசை அரங்கில் வெடித்துச் சிதறிய தீவிரவாதியின் உடலில் இருந்து சிரியா பாஸ்போர்ட் கைப்பற்றப் பட்டுள்ளது. அந்த தீவிரவாதியின் பெயர் அகமது அல்முகமது (25).
கடந்த அக்போடர் 3-ம் தேதி சிரியாவில் இருந்து அகதிகளோடு படகில் வந்த அவர் கிரீஸ் நாட்டின் லெரோஸ் தீவில் கரையேறி உள் ளார். அங்கிருந்து குரேசியா, ஆஸ் திரியாவை நடைபயணமாக கடந்து செர்பியாவுக்கு சென்றுள்ளார். அந்த நாட்டில் குடியுரிமை கோரி விண்ணப்பித்துள்ளார். அங்கிருந்து பாரீஸுக்குள் அகமது எவ்வாறு ஊடுருவினார் என்பது தெரியவில்லை.
மற்றொரு தீவிரவாதியின் உடலில் இருந்து எகிப்து பாஸ் போர்ட் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவரது பெயர், விவரத்தை போலீஸார் வெளியிடவில்லை.
அந்த தீவிரவாதியும் சிரியாவில் இருந்து அகதி போர்வையில் கிரீஸ் வந்து அங்கிருந்து பாரீஸுக்குள் நுழைந்துள்ளான். இருவரும் பாரீஸை அடைய சுமார் ஒரு மாதம் நடைபயணம் மேற்கொண்டுள்ளனர்.
தீவிரவாத தாக்குதல்களை ஒருங்கிணைத்து வழிநடத்தியதாகக் கூறப்படும் உமர் இஸ்மாயில் முஸ்தபா (29) பாரீஸின் புறநகர்ப் பகுதியைச் சேர்ந்தவர். 2004 முதல் 2010 வரை அவர் மீது 8 திருட்டு வழக்குகள் உள்ளன.
தீவிரவாதிகளோடு தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் 2010-ம் ஆண்டில் பாரீஸ் போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் விசாரணைக்குப் பிறகு அவர் விடுவிக்கப் பட்டுள்ளார்.
பத்தக்லேன் இசை அரங்கு தாக்குதலில் முஸ்தபா மனித குண்டாக வெடித்துச் சிதறியுள்ளார்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மற்றொரு தீவிரவாதியும் பாரீஸ் தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவர் யார் என்பதை அறிய உளவுத் துறை விசாரணை நடத்தி வருகிறது.
தீவிரவாதிகள் வந்த கார் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்தது ஆகும். பாரீஸ் புறநகர் பகுதியில் ஏ.கே.47 துப்பாக்கிகள், வெடிமருந்துகளுடன் கேட்பாரற்று நின்ற அந்த காரை பாரீஸ் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
எனவே தாக்குதல் நடத்திய 7 தீவிரவாதிகளில் 3 பேர் பெல்ஜி யத்தை சேர்ந்தவர்களாக இருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.
மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ... |
முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ... |
சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.