சூரியனின் புதிரை ஆராயும் இந்திய விஞ்ஞானி

திவ்யேந்து நந்தி என்ற பெயருக்கு, 'நிலவைப் போல் தெய்வீகமானது' என்று பொருள். ஆனால், இந்த இந்திய விஞ்ஞானியின் ஆர்வமெல்லாம் சூரியன் மீதுதான்.

37 வயதாகும் திவ்யேந்து, சூரியனைப் பற்றிய மிக முக்கியமான ஆய்வை மேற்கொண்டு வருகிறார். சூரியனின் அண்மைக் கால புதிரான மாற்றங்களுக்கு விடை காண்பதே திவ்யேந்துவின்

பிரதான நோக்கமாக இருக்கிறது. குறிப்பாக, 'சன்ஸ்பாட்' எனப்படும் 'சூரியப் புள்ளிகளின்' மறைவு குறித்து.

கொல்கத்தாவைச் சேர்ந்த சூரிய இயற்பியலாளரான திவ்யேந்து, பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்ïட் ஆப் சயன்ஸில் பயின்றவர். பின்னர், அமெரிக்காவில் மொன்டானா, ஹார்வர்டு போன்ற புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஆய்வுப்பணிகளில் ஈடுபட்ட திவ்யேந்து, 8 ஆண்டுகளுக்குப் பிறகு தாயகம் திரும்பியிருக்கிறார். சூரியன் தொடர்பான தனது ஆய்வுகளைத் தீவிரப்படுத்தியிருக்கிறார்.

கடந்த 2008- 2009-க்கு இடையில், சூரியனில் சூரியப் புள்ளிகள் காணாமல் போனது ஏன் என்பதே திவ்யேந்துவின் ஆய்வின் மையமாக இருக்கிறது. தொலைநோக்கிகள், பிற உபகரணங்கள் மூலம் சூரியனை ஆராய்ந்து கொண்டிருக்கும் விஞ்ஞானிகளுக்கு, ஏன் இவ்வாறு சூரியப் புள்ளிகள் காணாமல் போயின என்பது புரியாத புதிராக இருக்கிறது. சூரியப் புள்ளிகள் குறித்து விஞ்ஞானிகள் அதிக அக்கறை கொள்வதற்குக் காரணம் இருக்கிறது. பூமிவாழ் உயிரினங்கள் மீதும், விண்வெளி காலநிலை மீதும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை இவை.

சக்திவாய்ந்த காந்தப்புலங்களான சூரியப்புள்ளிகள், அவ்வப்போது தோன்றுவதும், மறைவதும், அவற்றின் எண்ணிக்கையும், அடர்த்தியும் கூடுவதும், குறைவதும் இயல்புதான். ஆனால், இவ்வளவு நீண்ட காலத்துக்குக் காணாமல் போனதில்லை. ஒரு நூற்றாண்டுக்கு மேலாக நிகழாத அதிசயம் இது. அதனால்தான் விண்வெளி ஆராய்ச்சியாளர்களும், காலநிலை ஆய்வாளர்களும் வியப்பும், கவலையும் அடைந்திருக்கின்றனர்.

சூரியப் புள்ளிகள் மறைவால் சூரி யனின் சக்தி சற்றுக் குறைந்து, சூரிய ஒளி சிறிது குறைந்திருப்பதைப் போலத் தோன்றுகிறது.

சூரியனின் இந்த மாற்றம் பூமி மீது நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றபோதும், பூமியின் வளிமண்டலப் படலத்தைச் சுருங்கச் செய்திருக்கிறது. எரிகற்கள் போன்ற விண்வெளிக் கழிவுகளைத் தடுத்து நிறுத்தும் வடிகட்டியாக வளிமண்டலப் படலம் உள்ளது. கழிவுகள் இந்தப் படலத்தை எட்டியதுமே எரிந்து அழிந்துவிடுகின்றன. ஒருமாதிரியான சுயசுத்திகரிப்பு அமைப்பு இது.

ஆனால், இëëந்தப் படலம் சுருங்கும்போது, விண்வெளிக் கழிவுகளை ஈர்த்து எரிக்கும் இதன் ஆற்றலும் குறைகிறது. ஆக, விண்வெளிக் கழிவுகள், விண்வெளியில் சுற்றிக்கொண்டிருக்கும் நமது செயற்கைக்கோள்களுடன் மோதும் அபாயம் அதிகரிக் கிறது. தவிர, விண்வெளியில் இருந்து மேலும் அதிகமான மின்காந்த நுண்ணலைகள் பூமிப் பரப்பை அடையும். அது, பூமியின் பருவநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

இந்த விஷயம் குறித்து ஆராய்வதற்கு இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் நிதியுதவி தனக்குச் சரியான நேரத்தில் கிடைத்திருப்பதாகக் கூறுகிறார் திவ்யேந்து நந்தி. திவ்யேந்துவுடன், அவருடைய முன்னாள் பி.எச்டி., மாணவரான ஆண்ட்ரஸ் முனோஸ்-ஜராமில்லோவும், மொன்டானா பல்கலைக்கழகத்தின் பீட்ரஸ் மார்டன்ஸும் ஆய்வில் இணைந்துள்ளனர்.

சூரியப் புள்ளிகள் ஏற்படுத்தக்கூடிய சூரியசக்திப் புயல்கள் விண்வெளியில் சுற்றிவரும் செயற்கைக்கோள்களிலும், தொலைத்தொடர்பிலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. எனவே இந்திய- அமெரிக்க விஞ்ஞானிகளின் ஆய்வு முக்கியத்துவம் பெறுகிறது.

ஒரு முக்கியமான ஆய்வில் நம்மவரும் இடம்பெற்றுள்ளது நமக்குப் பெருமைதானே!

One response to “சூரியனின் புதிரை ஆராயும் இந்திய விஞ்ஞானி”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகண� ...

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகணை; இந்திய ராணுவம் ஆய்வில் அம்பலம் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட ஷாஹீன் ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்� ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்; இன்று பார்லி., குழுவிடம் விளக்கம் அளிக்கிறார் விக்ரம் மிஸ்ரி இந்தியா-பாகிஸ்தான் மோதல், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் போர் ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய்ந்த நாடாக இருக்க வேண்டும் – மோகன் பகவத் ''உலகின் நலனுக்காக இந்தியா சக்திவாய்ந்த நாடாக இருக்க வேண்டும்,'' ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழை ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழைந்து பதிலடி – அமித்ஷா பெருமிதம் 'சுதந்திரத்திற்குப் பிறகு நமது ராணுவம் பாகிஸ்தானுக்குள் 100 கி.மீ. ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவ� ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன் ''பஹல்காம் தாக்குதலுக்காக பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி,'' ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு ந ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் காப்பியடிக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ...

மருத்துவ செய்திகள்

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...