இந்தியாவில் வீசும் காற்று மாறிவிட்டது

  "ஏசியான் அமைப் பிலுள்ள பல ஆசியநாடுகள், இப்பிராந்திய பொருளாதார வளர்ச்சிக்கு தங்களால் ஆன பங்களிப்பை செய்துள்ளன. இப்போது இந்தியாவின் முறை. எங்களுக்கானகாலம் வந்துள்ளதாக நாங்கள் உணர் கிறோம்.

 உலக பொருளாதாரம் சிறப்பாக இல்லை. ஆனால் இந்திய பொருளாதாரம் வளர்ந்துவருகிறது. தொடர்ச்சியாக கொண்டு வரப்பட்ட கொள்கை மாற்றங்கள் தான் இந்த வளர்ச்சிக்கு காரணம். இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி உயர்ந்து, விலை வாசி குறையத் தொடங்கியுள்ளது. என்னை பொருத்தளவில், சீர்திருத்தம் என்பது, ஒரு நீண்டபயணத்தின் நடுவே வரும் நிறுத்தங்கள் போன்றது.

ஆனால், பயணமுடிவு என்பது, இந்தியாவை முற்றிலுமாக மாற்றிப் போடுவதாக இருக்க வேண்டும். 21வது நூற்றாண்டு ஆசியாவுக்கான நூற்றாண்டு. ஆசியநாடுகள் அனைத்துமே சிறப்பாக செயல்பட்டுவருவது ஏசியான் நடவடிக்கைகளை ஆய்வுசெய்து பார்த்தால் தெரியும். இந்தியாவும், ஏசியான் நாடுகளும் இயல்பான கூட்டாளிகள்.

இந்த கூட்டாளித்துவம் தொடரவேண்டும். உலக நாடுகளில் வர்த்தகம் குறைந்து விட்டாலும், இந்தியாவின் முக்கிய துறை முகங்கள் 4.65 சதவீத சராசரி வளர்ச்சியை அடைந்துள்ளன. துறைமுக போக்குவரத்து 11.2 சதவீதம் அதிகரித்துள்ளது. புதிய தேசிய நெடுஞ் சாலைகள் அமைக்கும்வேகம் என்பது, 2013-14ம் ஆண்டில், நாள் ஒன்றுக்கு 9 கிமீ என நிர்ணயிக்கப் பட்டிருந்தது. அதை நாங்கள் 23 கி.மீயாக உயர்த்தி துரிதப்படுத்தி யுள்ளோம்.

மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா போன்ற திட்டங்கள் மூலம் முதலீட்டாளர் நட்புநாடாக இந்தியாவை மாற்றியுள்ளோம். இந்தியாவில் கண்டுபிடிக்கபடும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு, அறிவுசார் சொத்துரிமை, உரிமம் வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்.

கடந்த 65 வருட பாரம்பரியத்தை மாற்றி, இந்தியாவிலுள்ள மாநிலங்களையும், நாட்டின் வெளியுறவு கொள்கையை வகுப்பதில் ஒருபங்காளியாக சேர்த்துள்ளோம். ஒவ்வொரு கட்டத்திலும், இந்தியாவில் எங்கள் அரசு வந்தபிறகு வளர்ச்சி அதிகரித்துள்ளது. ஏசியான் அமைப்பிலுள்ள பல ஆசியநாடுகள், இப்பிராந்திய பொருளாதார வளர்ச்சிக்கு தங்களால் ஆன பங்களிப்பை செய்துள்ளன. இப்போது இந்தியாவின் முறை. எங்களுக்கான காலம் வந்துள்ளதாக நாங்கள் உணர்கிறோம். இந்தியாவில் வீசும்காற்று மாறிவிட்டது. அதை பார்க்க உங்கள் எல்லோரையும் அழைக்கிறேன். காற்றானது, எல்லைகளை தாண்டிவீச சற்றுகாலம் பிடிக்கும். எனவேதான் உங்களை நான் அழைக்கிறேன்.

ஏசியான் பொருளாதார உச்சி மாநாட்டில் மோடி பேசியது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...

புற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்

அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ...

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...