சிங்கப்பூரில் உள்ள பிரபல கோமள விலாஸ் ஹோட்டலில், பிரதமர் மோடிக்கு மசால் தோசை விருந்தளித்தார் சிங்கப்பூர் பிரதமர் லீ .
இந்திய பிரதமர் நரேந்திரமோடி, முதன் முறையாக சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். லிட்டில் இந்தியா பகுதியில் உள்ள பிரபல இந்திய ஹோட்டலான, கோமள விலாசில் மோடிக்கு சிங்கப்பூர் பிரதமர் நேற்று விருந்தளித்தார்.
இதில் என்ன விஷேசம் என்னவென்றால், தலைவர்கள் இருவரும் அந்த ஹோட்டலுக்கு நேரடியாக சென்று விருந்து உண்டதுதான்..
இட்லி, தோசை, சாதவகைகளை மட்டும் விற்றுவந்த இவ்வுணவகத்தை பிரபல உணவகமாக உயர்த்தியவர் திரு முருகையா ராஜு.
நான்கு சகோதரர்கள் ஒருசகோதரி என பெரிய குடும்பத்தில் பிறந்த திரு ராஜு 15 வயதில் பிழைப்புதேடி 1937ஆம் ஆண்டு தமிழகத்திலிருந்து சிங்கப்பூர் வந்தார். "கருணானந்த விலாஸ்" என அழைக்கபட்ட உணவகத்தில் துப்புரவுத் தொழிலாளராக அவர் வேலை செய்யத்தொடங்கினார்.
அதன்பின்னர் அவரது மகன் தன சேகருடன் இணைந்து ஒரு சிறிய உணவகத்தினை துவங்கினார். "கோமளாஸ்" என்ற பெயரில் விரைவு உண வகத்தை 1995ம் ஆண்டு தொடங்கிய தன சேகரன் முதல் சைவ இந்திய விரைவு உணவகத்தை அறிமுகப் படுத்தி தனக்கென உணவக துறையில் முத்திரை பதித்தார்.
தற்போது இந்த ஹோட்டலை அவரதுபேரனான ராஜ்குமார் நிர்வாகித்து வருகின்றார். அங்கு உணவருந்திய பிரதமர் மோடி, இந்திய உணவுகளான இட்லி, வடை, தோசையை ரசித்து உண்டார்.
கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ... |
உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ... |
கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.