பிரதமர் நரேந்திர மோடி 2029க்கு பிறகும் நாட்டை வழிநடத்துவார், அவரை பற்றி விவாதிப்பது என்ற கேள்விக்கே இடமில்லை என்று மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் கூறினார்.
இன்று மும்பையில் இந்தியா குளோபல் மாநாடு நடைபெற்றது. பிரபல தொழிலதிபர்கள், உலகத் தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, டிஜிட்டல் மாற்றம் மற்றும் உலகளாவிய செல்வாக்கு பற்றி விவாதிக்கின்றனர். இந்த மாநாட்டில் மகாராஷ்டிரா முதல்வர் பட்னவிஸ் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:

பிரதமர் நரேந்திர மோடிக்கு அடுத்து யார் என்று பற்றி யோசிக்க இது சரியான நேரம் அல்ல. ஏனெனில், 2029ல் மோடி மீண்டும் பிரதமராவார்.
நமது கலாசாரத்தில், தந்தை உயிருடன் இருக்கும்போது, வாரிசுரிமை பற்றிப் பேசுவது பொருத்தமற்றது.
பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா ஒரு வலுவான பொருளாதாரம் மற்றும் உலகளாவிய செல்வாக்கைக் கொண்டுள்ளது, எனவே அவர் நீண்ட காலம் ஆட்சி செய்வார்.
இவ்வாறு பட்னவிஸ் பேசினார்.
முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ... |
ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ... |
கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ... |