அந்நிய முதலீட்டுக்கு ஏற்றநாடாக இந்தியாவை மாற்றுவதற்கு பல சீர்த் திருத்தங்கள் செய்யப்படும், சரக்கு மற்றும் சேவைவரி அடுத்தவருடம் அமல்படுத்தப்படும் என்றும் சிங்கப்பூரில் நடந்த இந்திய சிங்கப்பூர் மாநாட்டில் பிரதமர் மோடி உறுதி படக்கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது,
இந்தியாவின் சிறந்த முக்கியமான நட்பு நாடாக சிங்கப்பூர் திகழ்ந்துவருகிறது. இந்தியாவும், சிங்கப்பூரும் பல்வேறு துறைகளில் இணைந்து செயல்பட்டு வருகின்றன. சர்வதேசளவில் சிங்கப்பூர் 10வது பெரியவர்த்தக கூட்டாளியாக உள்ளது. ஆசியான் நாடுகளில் இது இரண்டாம் இடம் வகிக்கிறது. சிங்கப்பூரில் இந்திய நிறுவனங்கள் அதிகளவில் முதலீடு செய்துள்ளன.
கடந்த 18 மாதங்களில் பொருளாதாரம் வேகம் எடுக்க பலநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பல சீர்த்திருத்தங்கள் எடுக்கப்பட்டன. இப்போது இறுதிகட்டத்தில் இருக்கிறோம். சீர்த்திருத்தங்கள் இப்போது செயல்பட ஆரம்பித்திருக்கின்றன. மக்களின் கனவுகளை செயல்படுத்துவதற்காக இவை உருவாக்கப்பட்டன.
புதிதாக மத்திய அரசு பொறுப்பேற்றவுடனே அந்நிய நேரடிமுதலீட்டு விதிமுறைகள் தளர்த்தப்பட்டு வந்தன. சமீபத்தில் அந்நியநேரடி முதலீட்டில் செய்யப்பட்ட சீர்த்திருத்தங்களால் திறந்தபொருளாதார கொள்கைகள் உள்ள நாடுகளில் இந்தியாவும் இருக்கிறது.
நாங்கள் இறுதிகட்ட பணிகளில் ஈடுபட்டிருக்கிறோம். அந்த விதி முறைகளில் சிறிய மாற்றங்களை செய்துவருகிறோம். தொழில்புரிவதற்கான சூழலை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையும் எடுத்து வருகிறோம். அதற்கான சூழல் மேம்பட்டுவருகிறது.
2016-ம் ஆண்டுக்குள் சரக்கு ,சேவை வரியை அமல்படுத்தி விடுவோம். கம்பெனி சட்ட தீர்பாயம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது அந்நிய நேரடி முதலீடு 40 சதவீதம் உயர்ந்துள்ளது. தவிர அந்நியநேரடி முதலீட்டுக்கான உத்திரவாதங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
வரி மற்றும் ஒழுங்கு முறை சம்பந்தமாக 14 நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் முதலீட்டு வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. கட்டு படியாகும் வீடுகள், ஸ்மார்ட்நகரங்கள், ரயில்வே, மரபுசாரா எரிசக்தி என பலதுறைகளில் வாய்ப்புகள் உள்ளன. உங்களை இந்தியாவுக்கு வரவேற்கிறேன். நீங்கள் இந்தியாவுக்கு வாருங்கள், உங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தை வழங்கவே நான் இங்குவந்திருக்கிறேன்.
இந்த இரண்டு நாட்கள் சுற்றுப் பயணம் மிகவும் சாதகமாகவும், உபயோகமாகவும் உள்ளது. பலசிங்கப்பூர் தலைவர்களை சந்தித்தேன். இதனால் இருநாட்டு உறவும் அடுத்த நிலைக்கு உயரும். இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையேயான உறவில் பொருளாதார உறவு முக்கிய மானதாகும்.
இந்தியாவில் செயல்படும் பலநிறுவனங்கள் சிங்கப்பூரில் தொடங்கப் பட்டவையாகும். இந்தியாவுக்கு வரும் அந்நியநேரடி முதலீடுகளில் சிங்கப்பூர் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அதே போல இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் செல்லும் முதலீடுகளும் உயர்ந்துகொண்டே வருகின்றன.
ஆந்திரபிரதேசத்தின் புதிய தலை நகரம் அமராவதி மற்றும் ஜவஹர்லால் நேரு துறைமுகத்தின் புதிய முனையம் ஆகியவற்றில் இந்தியா சிங்கப்பூர் இடையே கூட்டு ஏற்பட்டுள்ளது. இன்னும் மேலும் பலபுதிய கூட்டணிகள் உருவாக வேண்டும். இந்தியாவில் அதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவும் சிங்கப்பூரும் இணைந்து பணிபுரியலாம் என்றார்.
நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ... |
ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ... |
மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.