டில்லியில் நேற்று “சுதந்திரம் ஒன்றே வழி’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. இதில், காஷ்மீர் பிரிவினைவாத அமைப்பின் தலைவர் செய்யது அலி ஷா கிலானி, நக்சல் ஆதரவு தலைவர் வர வர ராவ், எழுத்தாளர் அருந்ததி ராய், ஆகியோர் கலந்து கொண்டனர். கருத்தரங்கில் பேசிய கிலானி, நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் எதிராக பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இதுகுறித்து பா.ஜ. தலைவர் அருண் ஜெட்லி கடும் கண்டனம் எழுப்பியுள்ளார். பேச்சு சுதந்திரம் என்பது நாட்டின் இறையாண்மைக்கு எதிராக இருக்க கூடாது. பேச்சு சுதந்திரம் என கூறி கொண்டு, நாட்டுக்கு எதிரான கருத்தை தெரிவிப்பது கண்டனத்துக்குரியது . அது, அரசியல் அமைப்பு சட்டத்துக்கு கட்டுப்பட்டதாகவே இருக்க வேண்டும். அவ்வாறு, நாட்டுக்கு எதிராக கருத்தை தெரிவிப்பது, சட்டப்படி குற்றம். இதுபோன்ற செயல்களை மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. இவ்வாறு அருண் ஜெட்லி செய்தியாளர்களிடம் கூறினார்.
இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ... |
உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ... |
குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.