”சிலர், ‘நகர்ப்புற நக்சல்’ பயன்படுத்தும் மொழியில் வெளிப்படையாகவே பேசுகின்றனர். தேசத்துக்கு எதிராக போர் தொடுப்போம் என்று கூறுபவர்களால், நம் அரசியலமைப்பையோ, நாட்டின் ஒற்றுமையையோ புரிந்துகொள்ள முடியாது,” என, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலை, பிரதமர் மோடி மறைமுகமாக விமர்சித்தார்.
பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளில், ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் பார்லி.,யில் நடந்து வருகிறது. இதில், நேற்று முன்தினம் பேசிய லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், மத்திய அரசின் திட்டங்களை கடுமையாக தாக்கிப் பேசினார்.
இதற்கு, லோக்சபாவில் நேற்றைய உரையின் போது பிரதமர் மோடி பதிலடி தந்தார். ஆனால் பேச்சின் எந்த இடத்திலும் ராகுலின் பெயரை அவர் நேரடியாக குறிப்பிடவில்லை.
பிரதமர் பேசியதாவது:
ஜாதி, மதம், இட ஒதுக்கீடு மற்றும் ஜாதி கணக்கெடுப்பு பற்றி பேசுவதை, சிலர் வழக்கமாக வைத்துள்ளனர். பா.ஜ., ஆட்சி காலத்தில், மருத்துவ படிப்பில் எஸ்.சி., வகுப்பினருக்கான ஒதுக்கீடு எண்ணிக்கை, 7,700லிருந்து, 17,000 ஆக அதிகரிக்கப்பட்டது.
ஏழைகளின் குடிசைகளுக்கு சென்று புகைப்படங்கள் எடுத்துக் கொள்வதை பொழுதுபோக்காக வைத்திருப்பவர்களுக்கு, பார்லிமென்டில் ஏழைகள் குறித்த பேச்சு, ‘போர்’ அடிக்கவே செய்யும்.
சட்டைப் பையில் அரசியலமைப்பு சட்டப் புத்தகத்துடன் சுற்றுபவர்களின் ஆட்சி காலத்தில், முஸ்லிம் பெண்கள் என்னென்ன கஷ்டங்களை அனுபவித்தனர் என்பது தெரியுமா?
‘அர்பன் நக்சல்’ என்றழைக்கப்படும், நகர்ப்புற நக்சல்கள் பேசும் பேச்சுக்களை சிலர் இன்று வெளிப்படையாகவே பயன்படுத்துகின்றனர். தேசத்துக்கு எதிராக போர் தொடுப்போம் என்கின்றனர். இவர்களால் அரசியலமைப்பையும், தேசத்தின் ஒற்றுமையையும் எப்படி புரிந்துகொள்ள முடியும்?
பழங்குடியினருக்கான ஒதுக்கீடு, 3,800லிருந்து, 9,000 ஆக அதிகரிக்கப்பட்டது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஒதுக்கீடு, 14,000லிருந்து, 32,000 ஆக உயர்த்தப்பட்டது.
அரசின் வெளியுறவு கொள்கையை பற்றி சிலர் பேசியுள்ளனர். அதில் ஆர்வமுள்ளவர்கள் ‘ஜே.எப்.கே.,ஸ் பார்காட்டன் கிரைசிஸ்’ என்ற புத்தகத்தை வாசிக்கவும். இந்த புத்தகம் வெளியுறவு கொள்கையில் நிபுணரான ஒருவரால் எழுதப்பட்டது.
அதில் வெளியுறவுத் துறையை கவனித்த நாட்டின் முதல் பிரதமர் பற்றிய குறிப்பு உள்ளது.
நாடு நெருக்கடியான சூழ்நிலையை எதிர்கொண்ட போது அப்போதைய அமெரிக்க அதிபர் ஜான் எப் கென்னடி உடன் நடந்த உரையாடல், வெளியுறவுக் கொள்கை என்ற பெயரில் என்ன மாதிரி ஆட்டம் ஆடினர் என்பது அதில் விவரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ... |
ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ... |
இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ... |