வங்க தேசத்துடனான நில பரிமாற்ற விவகாரத்துக்கு முயற்சிமேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு வங்கதேச முன்னாள் அதிபர் ஹெச்.எம்.இர்ஷாத் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மேற்குவங்க மாநிலம் கூச்பெஹர் மாவட்டம், தின்ஹட்டாவில் உள்ள சொந்த ஊருக்கு வங்கதேசத்தின் முன்னாள் அதிபர் ஹெச்.எம்.இர்ஷாத் செவ்வாய்க் கிழமை வந்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியாவுக்கும், வங்க தேசத்துக்கும் இடையேயான நில பரிமாற்ற பிரச்னை நீண்ட காலமாக நிலவிவந்தது. இந்நிலையில், இந்திய நாடாளு மன்றத்தில் நில பரிமாற்ற மசோதா தாக்கல் செய்யப் பட்டவிதம் மிகவும் பாராட்டுதலுக்குரியது.
இது, பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால் மட்டுமே சாத்தியமானது. அவருக்கு எனது நன்றிகள். மசோதாவை தாக்கல்செய்ததன் மூலம் வங்கதேச மக்களின் மனதை தொட்டுவிட்டார் மோடி என்றார்.
நில எல்லை ஒப்பந்தம் அமல்படுத்தப் பட்டதை அடுத்து, கடந்த ஜூலை மாதம்முதல் இந்தியா- வங்கதேசம் இடையே பதற்றம் நிறைந்த 162 பகுதிகள் பரிமாற்றம் செய்துகொள்ளப்பட்டன. மேலும், 7,110 ஏக்கர்கொண்ட 51 பகுதிகளை இந்தியாவும், 17,160 ஏக்கர் கொண்ட 111 பகுதிகளை வங்க தேசமும் பரிமாறி கொள்ளவுள்ளன.
அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ... |
1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.