மோடி -பைடன் விவாதம் மத்திய அரசு விளக்கம்

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர் கடந்த வாரம் தொலைபேசி வாயிலாக பேசினர். அப்போது, இரு நாட்டு உறவுகள் குறித்தும், அண்டை நாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்நிலையில், இது குறித்து மத்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் நேற்று விளக்கமளித்தார்.

அவர் கூறியதாவது:

வங்கதேச மாணவர்களின் இடஒதுக்கீடு போராட்டம் காரணமாக இந்தியா – வங்கதேசம் இடையிலான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கு இடையிலான பல கூட்டுத் திட்டங்களும் முடங்கிஉள்ளன. கடந்த வாரம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், நம் பிரதமருடன் தொலைபேசியில் உரையாடியபோது, இது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அதேபோல், வங்கதேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு இந்தியா தான் காரணம் என வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டது குறித்தும் இருநாட்டு தலைவர்கள் பேசினர்.

இந்த விவகாரத்தில் இந்தியா அளித்த உண்மையான விபரங்களை புறக்கணித்து பொய்யான தகவல்களை வங்கதேச ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. நீர்வள மேலாண்மைக்காக இரு நாடுகளின் கூட்டு வழிமுறைகள் சரியான திசையில் செல்வது தொடர்பான தகவல்கள் புறக்கணிக்கப்பட்டு, தேவையற்ற வதந்திகள் பரப்பப்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாகசத்தை மட்டுமே பேசுகிறது வரல ...

சாகசத்தை மட்டுமே பேசுகிறது வரலாறு – அமைச்சர் ஜெய் சங்கர் ''அனைத்து சமூகத்திலும் வரலாறு என்பது சிக்கலானது. அன்றைய அரசியல் ...

தி சபர்மதி ரிப்போர்ட் படத்தை அம ...

தி சபர்மதி ரிப்போர்ட் படத்தை அமைச்சர்களுடன் பார்த்த பிரதமர் மோடி குஜராத்தின் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை மையமாக வைத்து ...

கவலை அளிக்கும் டிஜிட்டல் மோசடி ...

கவலை அளிக்கும் டிஜிட்டல் மோசடிகள் – மோடி பேச்சு 'டிஜிட்டல்' மோசடிகள், 'சைபர்' குற்றங்கள், ஏ.ஐ., தொழில்நுட்பங்களால் அரங்கேறும், ...

உலக எய்ட்ஸ் தினம்

உலக எய்ட்ஸ் தினம் ​1988 முதல் ஆண்டுதோறும் டிசம்பர்1ஆம் தேதிஅனுசரிக்கப்படும் உலக எய்ட்ஸ் ...

வளர்ச்சி அடைந்த பாரதத்தின் வரல ...

வளர்ச்சி அடைந்த பாரதத்தின் வரலாறு அறிவியலின் மூலம் எழுதப்படும் -ஜிதேந்திர சிங் வளர்ச்சி அடைந்த பாரதத்தின் வரலாறு அறிவியலின் மூலம் எழுதப்படும் ...

சிறுபான்மையினரை பாதுகாக்ககும் ...

சிறுபான்மையினரை பாதுகாக்ககும் பொறுப்பு வாங்க தேசத்துக்கு உள்ளது – ஜெய் சங்கர் வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், ...

மருத்துவ செய்திகள்

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:

நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ...

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.