தங்களின் வாழக்கை முறையை சீராக்கி கொண்டுவிட்டு, மற்றவர்கள் மீதான கட்டுப்பாடுகளை விதிப்பது சரியல்ல

கடந்த ஒன்றரை வருடங்களாக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பல வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்வதை தொடர்ந்து விமர்சித்து வருகின்றன எதிர்கட்சிகள். குறிப்பாக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள். சென்னையில் ஏற்பட்ட கடுமையான மழை,வெள்ளம் பாதிப்பிற்கு காரணமாக எல் – நினோ என்கின்ற பருவநிலை மாற்றத்தின் ஒரு அங்கம் காரணமாக சொல்லப்படுகிறது. புவி வெப்பமயமாகுதல் அடிப்படையில் உருவாகும் இந்த எல்-நினோ என்கின்ற காரணி எதனால் உருவாகிறது?

இயற்கை வளங்களை அழித்து நாம் பயன்படுத்தும் நிலக்கரியை எரித்து மின்சாரம் தயாரிப்பது, பெட்ரோல், டீஸல் போன்ற எரி பொருட்களினால் மாசு உருவாகி புவி வெப்பமயமாகி, பனிமலைகள், படலங்கள் உருகுவதாலே கடும் மழை பொழிந்து இந்த நிலை ஏற்படுகிறது. பிற்காலத்தில் பனிப்படலங்கள் இல்லாது போய் கடும் வறட்சியை உருவாக்கும். அமெரிக்கா,ஜெர்மனி போன்ற மேற்கத்திய நாடுகள் தங்களின் வாழக்கை முறையை மேம்படுத்தி கொள்வதற்காக இயற்கையை அதிக அளவில் அழித்ததன் விளைவே பருவ நிலை மாற்றத்திற்கு வழிவகுத்தது. ஒரு கட்டத்தில் இதை உணர்ந்த அந்த நாடுகள் இதை கட்டுப்படுத்தும் முயற்சியில் உலக நாடுகளை ஐ.நாவின் மூலம் நிர்பந்தித்து, பருவ நிலை மாற்றத்தினால் ஏற்படும் அபாயங்களை எதிர் கொள்வது குறித்த திட்டங்களை விவாதம் செய்து வருவதோடு, நிலக்கரி உபயோகத்தை குறைத்து கொள்ள உலகளாவிய அளவில் சில கட்டுப்பாடுகளை விதிக்க முனைந்தன. இது நாள் வரை இந்த விவகாரத்தில் பட்டும் படாமலும் இருந்த இந்திய அரசு தற்போது மிக தெளிவான நிலையை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தங்களின் வாழக்கை முறையை சீராக்கி கொண்டுவிட்டு, மற்றவர்கள் மீதான கட்டுப்பாடுகளை விதிப்பது சரியல்ல என்பதே பிரதமர் நரேந்திர மோடியின் வாதம். மேலும், இந்த நிலைக்கு காரணமான நாடுகள் முன்னேறாத நாடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பதும் அவரின் நிலை. 'இயற்கை அளிப்பதை நாம் உண்ணலாம் ஆனால் அந்த இயற்கையை அழித்தால் நாமும் அழிவோம்' என்பதை தொடர்ந்து சொல்லி வருகிறார் மோடி அவர்கள். ஆகவே சமீபத்தில் நடந்த ஐ நா மாநாட்டில் கலந்து கொண்ட இந்தியா கண்டிப்பாக உலக நாடுகளுடன் ஒத்துழைப்பதாக சொல்லி,நம் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 25 விழுக்காடு மக்கள் மின்சாரம் இன்றி இருப்பதை எடுத்து சொல்லியிருக்கிறது.

இது ஒருபுறமிருக்க, இந்தியாவில் இதுவரை எந்த மாநில முதல்வரும் செய்யாத சாதனையை குஜராத் முதல்வராக நரேந்திர மோடி அவர்கள் இருந்த போது செய்தது பிரமிக்கத்தக்கது மட்டுமல்ல, மற்ற மாநிலங்களை சிந்திக்க தூண்டியதும் கூட. நிலக்கரியை பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதால் இருக்கும் ஆபத்தை உணர்ந்து, குஜராத்தில் அதிக அளவில் சூரிய மின்சாரத்தை உற்பத்தி செய்து கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவிற்கே வழிகாட்டியாக திகழ்ந்தார் மோடி. தற்போது குஜராத்தை விட அதிக அளவில் புதுப்பிக்கப்படத்தக்க .சூரிய மின் உற்பத்தியை செய்யும் மாநிலமாக திகழ்கிறது பாஜக ஆளும் மற்றொரு மாநிலமான ராஜஸ்தான். தற்போது 1167 மெகாவாட்ஸ் மின்சாரத்தை தயாரிக்கிறது.

ஒரு புறம் இந்தியாவில் அனைவருக்கும் மின்சாரம் என்ற உறுதியில் இருக்கும் நரேந்திர மோடி அவர்கள், மறுபுறம் பருவநிலை மாற்றத்தின் விளைவுகளை எதிர் கொள்ளும் வகையில் மற்ற நாடுகளுடன் சூரிய ஒளி மின்சாரம், யுரேனியம் போன்ற மின் உற்பத்தி ஒப்பந்தங்களை மற்ற நாடுகளுடன் செய்து கொள்வது சிறப்பானதாகும். வரக்கூடிய காலங்களில் பசுமை இல்ல வாயு என்றழைக்கப்படும் இயற்கையை அழித்து அதனால் ஏற்படும் மாசுக்களை கட்டுப்படுத்த மேற்கத்திய நாடுகளின் அழுத்தம் அதிகரிக்கும். அதற்குள்ளாக நமது நாட்டு மக்கள் அனைவருக்கும் மின்சாரம் அளிப்பதோடு, பிற்காலத்தில் புதுப்பிக்கப்படத்தக்க மின்சாரத்தை உபயோகிப்பதன் மூலம், சென்னையில் தற்போது ஏற்பட்டது போன்ற ஒரு நிலையை மறுபடியும் சந்திக்காது இருக்க வேண்டிய முன்னெச்செரிக்கைகளை எடுத்து கொண்டு வருகிறது நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு.

2009 ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து பருவநிலை மாற்றத்தை சந்திப்பது தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் பிரதமர் நரேந்திர மோடி, உலக நாடுகளுக்கு சொன்ன அறிவுரை "பருவ நிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகளை நாம் சந்திக்க வேண்டுமெனில், யோகா செய்வதே சிறந்த பலனை அளிக்கும்' என்று கூறியதன் அடிப்படையில் உலகில் உள்ள அனைத்து நாடுகளும் (ஒரு சிலவற்றை தவிர) அதை உணர்ந்து ஏற்று கொண்டு தொடர்வது குறிப்பிடத்தக்கது. ஆனால் நம் நாட்டில் உள்ள முற்போக்குகளும், காங்கிரஸ் கட்சியினரும், கம்யூனிஸ்ட் கட்சியினரும் யோகா தினத்தை கிண்டல் செய்தும், பழித்தும் வந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் ஏற்பட்ட இந்த நிலையை கண்ட பிறகாவது, மத்திய பாஜக அரசு முன்னேற்ற பாதைக்கு வழிவகுக்கும் அதே நேரத்தில் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளிலும் தன் முழு கவனத்தை செலுத்துகிறது என்பதை உணர்ந்து, நாட்டின் நலன் காக்கும், மக்களின் உயிர் காக்கும் பணிகளில், 'அரசியல்' செய்யாது, நரேந்திர மோடி அவர்களின் அரசுக்கு ஒத்துழைப்பை நல்குவார்களா? காலம் பதில் சொல்லும். காத்திருப்போம்.

 நன்றி ; நாராயண திருப்பதி

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக் ...

அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக்கள் நிராகரித்து விட்டனர் –  மோடி  'பார்லியில் மக்களுக்காக என்றுமே காங்., பேசியதில்லை. அதிகாரப் பசி ...

சிட்டுக்குடுவிக்களின் எண்ணிக் ...

சிட்டுக்குடுவிக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது – மோடி “நாட்டில் குறைந்து வரும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு ...

தேசிய மாணவர் படையில் இணையுங்கள ...

தேசிய மாணவர் படையில் இணையுங்கள் – பிரதமர் மோடி அழைப்பு  'என்.சி.சி.,யில் அதிகமான இளைஞர்கள் இணைய வேண்டும். வளர்ந்த இந்தியாவை ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

மருத்துவ செய்திகள்

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...

கருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை

சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ...